மோசமான தோல்வி… முதன்முறையாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சிக்கிய சி.எஸ்.கே அணி சின்னா பின்னமானது.

By: Updated: October 24, 2020, 03:36:25 PM

சி.எஸ்.கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

காதலரை கரம் பிடிக்கும் ஜீ தமிழ் வில்லி நடிகை!

ஐ.பி.எல் 2020 தொடரின் 41-வது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் காயம் காரணமாக போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுமோசமாகச் சொதப்பியது. ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, அம்பத்தி ராயுடு போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக சீனியர் வீரர்களான வாட்சன், கேதர் ஜாதவ், சாவ்லா அணியிலிருந்து நீக்கப்பட்டு இளம்வீரர்களான ருத்துராஜ், ஜெகதீசன் மற்றும் வெளிநாட்டு சீனியர் வீரரான இம்ரான் தாஹீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சி.எஸ்.கே அணியில் முதன்முறையாக ருத்துராஜ் தொடக்க வீரராக களமிறங்கினார்.

முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு சி.எஸ்.கே வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். ராயுடு 2 ரன்களிலும், டூ-பிளசிஸ் 1 ரன்னிலும், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். சி.எஸ்.கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிகவும் பரிதாப நிலைக்கு சென்றது.

கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா சற்று ஆறுதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா 7 ரன்னில் நடையை கட்டினார். ராகுல் சஹர் பந்துவீச்சில் மெகா சிக்சர் ஒன்றை தோனி அடித்தார். நீண்ட நாட்களுக்கு பின் தோனி இன்று வானவேடிக்கை நிகழ்த்துவார் என்று ஆவலுடன் இருந்த நிலையில் அடுத்த பந்திலேயே அவுட்டாகி தோனி ரசிகர்களின் கனவை தவுடுபிடி ஆக்கினார். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சிக்கிய சி.எஸ்.கே அணி சின்னா பின்னமானது. இறுதியாக சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. சி.எஸ்.கே அணி சார்பில் சாம் குர்ரான் மட்டும் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். மும்பை அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. சென்னை அணி பௌலர்கள் கடுமையாகப் போராடியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.

இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை கடைசியில் தான் இருக்கிறது சி.எஸ்.கே. ஒரு முறை கூட முதல் நான்கு இடத்திற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் முன்னேற முடியவில்லை. இந்த படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக அந்த அணியில் கடந்த 10 வருடங்களாக இருந்த சுரேஷ் ரெய்னா இல்லை. அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ரூ10,000 விலைக்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்: பெஸ்ட் எதுன்னு பாருங்க!

2020 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது. இந்த சீசனில் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்ற மோசமான பெயர் சிஎஸ்கே அணிக்கு கிடைத்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Csk defeated by mi chennai super kings mumbai indians

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X