IPL 2020: இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் பெரும் ஆறுதல் அளிப்பதை மறுக்க முடியாது. கிட்டத்தட்ட 8 மாதங்களாக ரசிகர்கள் எதிர் கொண்ட மன அழுத்தத்தை, இந்த கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் Vs சன் ரைசஸ் ஐதராபாத்
நேற்று சன் ரைசஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் என இரு போட்டிகள் நடந்தன. ஐபில் 2020-யில் 17-வது லீக் போட்டியில் ஐதராபாத்தும், மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 208 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
கொரோனா தொற்று: டொனால்ட் டிரம்பின் சோதனை காக்டெயில்
இந்தப் போட்டியின் போது, ஐதராபாத் அணியிலிருந்து புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் அணியில் இடம் பெற்றனர். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மும்பை அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்த போது, ஷார்ஜா மைதானத்தில் எளிதாக 200 ரன்களை கடக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனை மும்பை அணியும் பூர்த்தி செய்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷார்ஜா மைதானத்தில் இந்த சீசனில் 200 ரன்களை எட்டாத ஒரே அணி ஹைதராபாத் மட்டுமே.
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தொடர்ந்து 3 தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி, அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இது அணி வீரர்களுக்கு மட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் முக்கியமான மேட்சாக பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரு அணியின் ’கம்பேக்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல, ஓபனிங் பேட்ஸ் மேன்கள் ஷேன் வாட்சன், ஃபாப் டூ ப்ளெசிஸ் இருவரும் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கிய நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே வெற்றி பெற்றது. சரியான பயிற்சி இல்லாதது, கொரோனா நெருக்கடி இவற்றை தாண்டி இந்த வெற்றியை சிஎஸ்கே பெற்றதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால் அடுத்து விளையாடிய 3 மேட்ச்களிலும், தொடர் தோல்வியை தழுவியதால், சென்னை ரசிகர்கள் சோர்வடைந்தனர்.
Watto Fafulous stand that was to become our highest ever in #yellove! #WhistlePodu #WhistleFromHome #KXIPvCSK ???????? pic.twitter.com/Ocpa8HMnl9
— Chennai Super Kings (@ChennaiIPL) October 4, 2020
”சி.எஸ்.கே தற்போது ஃபார்மில் இல்லை, அங்கு இருக்கும் பெரும்பாலான வீரர்கள் வயதானவர்கள், அவர்களால் முன்பு போல் வெற்றி பெற முடியாது” போன்ற கமெண்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. டீமை தோனி சரி செய்ய வேண்டும், ஆர்டரை மாற்ற வேண்டும் என்ற பிரஷர்களும், சிஎஸ்கே கேப்டனான தோனி மீது வைக்கப்பட்டது.
இதையடுத்து அணியில் சில மாற்றங்களை செய்தாலும், முக்கிய வீரர்கள் மாற்றப்படவில்லை. இருப்பினும், நேற்று நடந்த மேட்ச், சிஎஸ்கே வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை தந்துள்ளது. நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே இமாலய வெற்றி பெற்றுள்ளது.
முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 179 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொடுத்தாலும் சிஎஸ்கேவின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் ஃபாஃப் டூ பிளசிஸ் ஆகியோர் முறையே 83 ரன்கள் மற்றும் 87 ரன்களை அடித்து அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டி ரசிகர்களுக்கு தெறி அனுபவத்தை கொடுத்துள்ளது.
இந்த வெற்றியை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் உடனுக்குடனான பதிவுகளை போட்டு கொண்டாடிய நிலையில், கேப்டன் தோனியும் வாட்சன் மற்றும் டூ ப்ளெசிஸ் இருவரையும் பாராட்டியுள்ளார். அவர்களின் வழக்கமான ஷாட்கள் திரும்ப வந்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தோனி. ரெய்னா அணியில் இல்லாத குறையை ஃபாஃப் டூ பிளசிஸ் தீர்த்து வைத்துள்ளார். அவர் இந்த ரன்களின் மூலம் தனது 3வது அரைசதத்தை எடுத்துள்ளார். கடந்த போட்டிகளில் தன்னுடைய பாட்டி இறப்பு உள்ளிட்டவற்றால் மனநெருக்கடியில் இருந்த ஷேன் வாட்சனும் தற்போது பார்மிற்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
ஒரு கம்பேக் மேட்ச் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது சிஎஸ்கே. இனி வரும் நாட்களில் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”