IPL 2020: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வி என்று 6 புள்ளியுடன் ஒரே நிலைமையில் உள்ளன. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அந்த வகையில் இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா போராட்டம் தான்.
’நீங்க எதாவது நோண்டினே இருப்பீங்க’ ரியோ-சுரேஷ் மோதல்
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீச முடியாமல் போனதற்காக ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். ஆனால் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமாக இருந்ததால் தான் வேறு வழியின்றி அவர் வெளியேறினார். காயம் காரணமாக அவர் சில நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோ ஆட்டத்தை தவற விட வேண்டியது வரலாம்.’ என்றார். ஏற்கனவே கால் முட்டி காயத்தால் அவர் முதல் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை. தோல்விகளால் துவண்டு போய் உள்ள சென்னை அணிக்கு பிராவோவின் காயம் மேலும் ஒரு பேரிடியாகும்.
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் அதன் பின் பல தோல்விகளை சந்தித்தது. முதல் பாதி தொடரில் ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மட்டுமே பெற்று இருந்தது. அடுத்த ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதியாக்கலாம் என்ற நிலையில் இருந்தது. அணி மாற்றம் அணியை மாற்றி, பேட்டிங் ஆர்டரை மாற்றிய பின் எட்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாம் பாதியில் சிஎஸ்கே அணி இனி வெற்றிப் பாதையில் பயணம் செய்யும் என ரசிகர்கள் நம்பினர். ஆனால், அடுத்து ஆடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதுவும் வெற்றிக்கு மிக அருகே வந்த சிஎஸ்கே அணி, கடைசி ஓவரில் தோல்வி அடைந்தது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே அணி தோல்வி பெற ஒரே காரணம் பிராவோ. இந்த முறை சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்றால், அது சிஎஸ்கே அணியின் வரலாற்றில் பெரிய கரும்புள்ளியாக இருக்கும்.
முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் போராடி பணிந்த ராஜஸ்தான் அணியும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் தரமான வீரர்கள் இருந்தும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தள்ளாடுகிறது. முதல் 2 ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த சஞ்சு சாம்சன் அடுத்த 7 ஆட்டங்களில் பேட்டிங்கை மறந்து விட்டது போலவே ஆடியுள்ளார். அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரிடம் இருந்து இன்னும் முழுமையான திறமை வெளிப்படவில்லை. தங்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் இவர்கள் ரன்வேட்டை நடத்த வேண்டியது அவசியமாகும். இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்துடன் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
”மரியாதையும் மதிப்பும் இல்லாத இடத்தில் பாட முடியாது” – விஜய் யேசுதாஸ் வேதனை
கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய டூபிளசிஸ் இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.இன்றைய போட்டியில் பிராவோ விளையாடவில்லை. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மட்டுமே விளையாடுவார்.
இன்று இரவு 730 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டு களிக்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.