/tamil-ie/media/media_files/uploads/2020/04/b689.jpg)
ms dhoni, csk, dwayne bravo, ms dhoni csk, ms dhoni ipl, ipl news, csk news, chennai super kings, ms dhoni chennai, dwayne bravo ms dhoni, bravo dhoni csk, dhoni retirement, தோனி, பிராவோ, கிரிக்கெட் செய்திகள், ஐபிஎல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நிர்வாகம் தன்னிடம் காட்டிய நம்பிக்கைக்கு தனது கரியரின் பிற்பகுதியில் நிறைய வெற்றிகளைக் கொடுக்க வேண்டியிருப்பதாக டுவைன் பிராவோ கூறினார், மேலும், எம்.எஸ். தோனிக்கு இப்போது ஏதாவது செய்ய விரும்புவதாகக் கூறினார். அவரது தொழில் வாழ்க்கையில்.
இதுகுறித்து பிராவோ கிரிக்பஸிடம் கூறுகையில், அவரைப் போன்ற வீரர்களும் ஷேன் வாட்சனும் சிஎஸ்கேவால் எவ்வாறு தக்கவைக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றி பேசினார், இதனால் அவர்களின் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
“மற்ற அணிகளில், நீங்கள் செயல்படவில்லை என்றால், நீங்கள் பிரஷரை உணருவீர்கள். CSK உடன், நாங்கள் அதை உணரவில்லை.
20, 2020Champion @DJBravo47's next song is for 'his brudah, his brudah from anodah muddah' - @msdhoni No.7! ???????????? #AnbuDenLions#WhistlePodupic.twitter.com/4075ewbJti
— Chennai Super Kings (@ChennaiIPL)
Champion @DJBravo47's next song is for 'his brudah, his brudah from anodah muddah' - @msdhoni No.7! ???????????? #AnbuDenLions#WhistlePodupic.twitter.com/4075ewbJti
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2020
ஷேன் வாட்சன் இதை வெளிப்படையாகவே கூறினார். நான் வேறொரு அணியில் இருந்திருந்தால், இந்நேரம் கைவிடப்பட்டிருப்பேன் அல்லது ஓய்வு பெறுவது பற்றி யோசித்திருப்பேன். CSK போன்ற அணியை நாம் மீண்டும் பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. இதன் நன்றி முழுவதும் தோனி மற்றும் ஃப்ளெமிங்கிற்கு தான் செல்ல வேண்டும்" என்று பிராவோ கூறினார்.
என்ன பாஸ் இவ்ளோ ஈஸியா சொல்லிட்டீங்க? - மனைவியுடனான மோதலும், ஷிகர் தவான் வீடியோவும்
2011 முதல் சிஎஸ்கேவின் வெற்றிகரமான போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பிராவோ, அணிக்காக 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை அணியுடனான தனது காலத்தில் இரண்டு பர்பில் தொப்பி மற்றும் இரண்டு ஐபிஎல் சாம்பியன் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
“நான் பலமுறை என்னிடம் கேட்டுக் கொண்டேன், எம்.எஸ் போன்ற ஒருவர் ஏன் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று. எனது சொந்த கிரிக்கெட் வாரியத்திற்கும் தேர்வாளர்களுக்கும் கூட என் மீது இந்த நம்பிக்கை இல்லை. ஆனால் மஹி எனது திறமையையும் நான் விளையாடும் விதத்தையும் மதிக்கிறார். அது எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது"
“நான் அவருக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். அவர் தனது தொழில் வாழ்க்கையின் முடிவிற்கு வருகிறார், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை அபாரமானது. அவர் என் வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்" என்று பிராவோ மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.