கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதனால் குடும்பத்தலைவிக்கான வேலை அதிகரிக்கிறது. மேலும் குடும்பத் தலைவர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வராத போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது.
சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பதில் இருந்து சகல விஷயங்களிலும் கணவன் - மனைவி இடையே இந்த லாக்டவுன் காலத்தில் பிரச்சனை ஏற்படுகிறதாம். போலீஸின் கட்டுப்பாட்டு அறைக்கு கூட இதுகுறித்த புகார்கள் வருவது உச்சக்கட்ட கொடுமை.
'கிரிக்கெட் உலகை சூதாட்ட கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுங்கள்' - ரமீஸ் ராஜா புலம்பல்
அதேசமயம், அரசும் உதவி நம்பரை அறிவித்து தேவைப்பட்டால் உதவிக்கு அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான், இப்படிப்பட்ட செய்திகளை கேட்பது கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
27, 2020
தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ஆயிஷா மற்றும் அவரது குழந்தைகளுடன் குத்துச்சண்டை பயிற்சி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு "நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டில் சந்தோசமாக நேரத்தை கழித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப வன்முறை இன்று வரை நடந்து வருகிறது என்பதை கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. நாம் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். அன்பான ஜோடியை தேர்வு செய்க... குடும்ப வன்முறைக்கு நோ சொல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”