dhoni, msd, sakshi, csk, ipl2020, bcci. icc,, cricket news, தோனி, சாக்ஷி தோனி, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் வல்லுனர்களாலேயே கணிக்க முடியவில்லை. 2 லட்சம் பாதிப்புகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில்துறைகள் முடங்கியிருக்கும் சூழலில், கிரிக்கெட் உலகமும் வெறிச்சோடிப் போயுள்ளது. ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 நடக்குமா என்று ஐசிசி-க்கே தெரியவில்லை.
Advertisment
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தோனியின் மனைவி சாக்ஷி உரையாடினார். அப்போது பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"இந்தியாவில் ஊரடங்கு முற்றிலும் நிறைவடைந்து, வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை எனில், நானும் தோனியும் உத்தர்கண்ட்டில் உள்ள ஏதேனும் ஒரு மலைப்பகுதிக்கு செல்லலாம் இருக்கிறோம். மலையில் இருக்கும் ஏதேனும் கிராமம் ஒன்றில் தங்கி, மலையேற்றத்தில் ஈடுபடலாம் என்று இருக்கிறோம்.
Advertisment
Advertisements
இந்த ஊரடங்கு காலத்தில், தோனி கேம் விளையாடுவதில், தனது பேவரைட் நாய்களுடனும் அவர் நேரத்தை கழித்து வருகிறார்" என்று கூறினார்.
மேலும், வின்டேஜ் தோனி பற்றி பேசிய சாக்ஷி, "நான் தோனியை நீண்ட ஆரஞ்சு நிற முடியுடன்கண்டிருந்தால், நான் அவரைப் திருப்பி பார்த்திருக்க மாட்டேன். ஜானின் தலைமுடி அவருக்குப் பொருத்தமாக இருந்தது.
எனது இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளில் நான் தோனியை சந்தித்தேன். நான் அவரை ஒரு நண்பர் மூலமாகச் சந்தித்தேன், அவர் மிகவும் சாதாரண மனிதராகத் தோன்றினார். அந்த நேரத்தில் நான் கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு சச்சின் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
"2010 முதல், சி.எஸ்.கே உடனான முதல் சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்கா என்று எனக்கு நினைவிருக்கிறது. மஹி எப்போதும் அவரது அறைக் கதவைத் திறந்துவைத்திருப்பார், இதனால் மஹியுடன் பேச வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்துளளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil