செல்பி எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து தொல்லை கொடுப்பதாக சிஎஸ்கே கேப்டன் தோனி காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.
dhoni news:
ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்கியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் போட்டியில் அதிக ரசிகர்களை கொண்ட தோனியின் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கணக்கை துவங்கியது. சென்னையில் சிஎஸ்கே அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது ஐபிஎல் அறிந்த ஒன்று. அதிலும் சென்னை கேப்டன் தல தோனிக்கு கேட்கவே வேணாம்.
மேட்சை பார்ப்பதை விட தோனியை பார்க்கும் கூடும் கூட்டம் அதிகம்..இதுவரை இவர் விளையாடும் மைதானம் அல்லது பயிற்சி நேரங்களில் ரிஸ்க் எடுத்து உள்ளே நுழைந்து அவரை காண முயற்சித்த ரசிகர்கள் எண்ணிக்கை ஏகப்பட்டது.
தோனி எப்போது சென்னை வந்தாலும் அவரை பார்க்க, அவருடன் செல்பி எடுக்க ஏர்போர்டிலே ரசிகர் பட்டாளம் திறண்டு விடும். இதற்கு பலமுறை தோனி நன்றியும் கூறியுள்ளார். ஆனால் இப்போது சென்னை வந்த நேரத்தில் செல்பி டார்ச்சரால் தோனி கடுப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் அதிகாரிகளின் வாரிசுகளால் தோனி இந்த பிரச்சனையை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள தோனி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளதாகவும் சென்னை அணியின் மேலாளர் ரசூல் மூலம் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு தரும் அளவில் காவல் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து செல்பி எடுக்கவும், போட்டோ எடுக்கவும் நிற்பதாகவும் இது தனக்கு மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளதாகவும் டோனி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எரிச்சல் ஊட்டும் வகையில் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்றும் தோனி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தப் புகார் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அது தெற்கு மண்டல இணை ஆணையர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மகளுக்கு டெஸ்ட் வைத்த தோனி.. கில்லி போல் அடிச்சி தூக்கிய ஜிவாவின் அடுத்த க்யூட் வீடியோ!
இந்த தகவல் வெளியானது முதல் தோனி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதே சமயம் போலீஸ் அதிகாரிகள் குறித்து போலீஸ் நிலையத்திலேயே தோனி புகார் அளித்திருப்பது அவரின் நேர்மையும், கெத்தையும் காட்டுவதாக ரசிகர்கள் வழக்கம் போல் புகழ் பாடி வருகின்றனர்.