Dinesh Karthik Speaking Tamil: (தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்)... இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதைத் தொடர்ந்து, 2ம் நாளான இன்று, இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இதில், 21 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பேட்டிங் செய்கையில், அஷ்வின் பந்துவீசும் போது, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அவரிடம் தமிழில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அஷ்வினிடம் பேசும் கார்த்திக், "போட்றா மாமா போட்றா மாமா.... அடுத்த மூணையும் அப்டியே போடு மாமா... என்ன பண்றான்னு பாக்கலாம்... " என்று உற்சாகப்படுத்தினார்.
தற்போதைய நிலையில், தமிழக வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியிலேயே இடம் கிடைக்கிறது. தோனி கேப்டனாக இருந்தவரை, முன்னணி பவுலராக வலம் வந்த அஷ்வின், தற்போது குறுகிய ஓவர் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளார். அதேபோல், தினேஷ் கார்த்திக்கிற்கு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வாய்ப்பு கிடைத்தாலும், ஆடும் லெவனில் அவருக்கான வாய்ப்புகள் அரிது தான்.
அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய், கார்த்திக், அஷ்வின் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வொரு தொடரில் விளையாடும் போதும், தமிழில் பேசுவதும், அது வைரலாவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், இப்போது கார்த்திக் - அஷ்வின் வீடியோ தமிழக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து LIVE Cricket போட்டியை tamil.indianexpress-ல் காண இங்கே க்ளிக் செய்யவும்