Nitin Sharma
Dr. Vikas Kumar, Indian origin’s name on ben stokes’s jersey : 117 நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியினருக்கும் இங்கிலாந்திற்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் பங்கேற்றுள்ள முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் மருத்துவர்களின் பெயர்கள் ஜெர்ஸியில் பதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துர்ஹாமில் இருக்கும் டார்லிங்டனில் உள்ள தேசிய மருத்துவமனையின் பணியாற்றி வருகிறார் மருத்துவர் விகாஸ் குமார். அவருடைய பெயர் பதித்த ஜெர்ஸியை இங்கிலாந்து நாட்டின் வீரரான பென் ஸ்டோக்ஸ் அணிந்திருந்தார். ரைஸ் தி பேட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் கிளப்புகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர் டாக்டர் விகாஸ் குமார்.
பள்ளி காலத்தில் இருந்தே பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று கனவு கண்ட விகாஸ் குமாரின் கனவுக்கு நெருக்கமாக நிகழ்ந்த தருணம் என்பது 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இலங்கை ஆட்டத்தில் டூயூட்டி டாக்டராக பணியாற்றியது தான். ஆனால் 48 மணி நேரத்திற்கு முன்பு இந்த கனவுக்கு மிக அருகில் நிகழந்த மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவம் என்றால் விகாஸ் குமாரின் பெயர் பதித்த ஜெர்ஸியை பென் ஸ்டோக்ஸ் அணிந்தது தான்.
Today we #raisethebat to honour the heroes within our cricket family who have supported those in need during the past few months.
Find out more ⬇️
— England Cricket (@englandcricket) July 8, 2020
இது குறித்து விகாஸ் குமாரிடம் பேசிய போது, ஸ்டோக்ஸ் மற்றும் மற்ற நபர்கள் மருத்துவர்களின் பெயர்களை தங்களின் உடைகளில் அணிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு இது மிகவும் இக்கட்டான காலகட்டம். என்.எச்.எஸ் ஊழியர்கள் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். இது இந்தியாவில் உள்ள மருத்துவ நண்பர்கள் உட்பட மருத்துவதுறையில் பணியாற்றும் நபர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் ஆகும். டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற அவர், மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பை மயக்கமருந்து துறையில் முடித்தார்.
தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகனுடன் 2019ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு குடி பெயர்ந்தார் விகாஸ். ஆசிய மக்களால் உருவாக்கப்பட்ட கில்லி பாய்ஸ் ஆமெச்சூர் க்ளப்பிலும், கவ்கேட் கிரிகெட் க்ளபிலும் கிரிக்கெட் விளையாடி வருகிறார் விகாஸ். நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்று கூறும் விகாஸ் தன்னுடைய மருத்துவக் கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். வீட்டில் இருக்கும் மற்றவர்களைப் போலவே தானும் மருத்துவராகிவிட்டேன் என்று கூறி சிரிக்கிறார் அவர்.
To read this article in English
துர்ஹாமில் மட்டும் 3,310 கோவிட் நோயாளிகள் உள்ள நிலையில், விகாஸ் இரண்டு தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றி வருகிறார். “மயக்க மருந்து நிபுணர்களாக, அவசரகால அறுவை சிகிச்சைகளில் பங்கேற்பது மற்றும் சுவாசக் குழாய்களைப் பாதுகாக்கும் பணி தவிர்த்து, ஒவ்வொரு அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளியை கவனித்துக் கொள்வது, இது அதிக ஆபத்துள்ள ஏரோசல் உருவாக்கும். விகாஸ் தன்னுடைய வீட்டிலேயே தனிமனித இடைவெளியை பின்பற்ற அவருடைய மகனை அவர் மனைவி ஸ்மிதா ரஷ்மீ பார்த்துக் கொள்கிறார்.
இவர் தவிர 3 இந்திய மருத்துவர்களின் பெயர்கள் ஜெர்ஸியில் இடம் பெற்றிருந்தது. நார்விச்சில் பணியாற்றும் மருத்துவர் ஜமாஸ்ப் கைகுஸ்ரூ தஸ்தர், ஹரி கிருஷ்ணா ஷா மற்றும் பிசியோதெரப்பிஸ்ட் க்ரிஷண் அகதாவும் இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஜோஸ் பட்லர் அணிந்திருந்த ஜெர்ஸியில் தஸ்தரின் பெயர் இடம் பெற்றிருந்தது, 2003இல் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு வந்த அவர் தற்போது நார்விச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். “கிரிக்கெட் மீதான ஈடுபாடு எனது தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து எனக்கு கிடைத்தது. நான் கடந்த ஆண்டு எனது தந்தை கைகுஸ்ரூவை இழந்தேன், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருடைய பெயரைச் சேர்க்கும்படி கேட்டேன், ”என்கிறார் 42 வயதான அந்த மருத்துவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Dr vikas kumar of indian origins name on ben stokess jersey
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!