இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபவாத் ஆலம் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அதுவும், உலக இடது கை பழக்கமுடையோர் தினமான இன்று (ஆக.13) , இடது கை வீரர் ஃபவாத் ஆலம் இத்தனை வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்காக விளையாடுகிறார்.
Advertisment
கராச்சியைச் சேர்ந்த ஃபவாத் ஆலம், இதுவரை பாகிஸ்தானுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதில் 250 ரன்களை 1 சதத்துடன் 41.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அன்னிய மண்ணில் அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்த முதல் பாக். வீரர் ஆக சாதனை புரிந்தார். ஆனாலும், அணியில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற உள்நாட்டு வீரர் தாரிக் ஆலமின் மகன் ஆன பவாத் ஆலம் தன் 17வது வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
முதல் டெஸ்ட் போட்டியை இலங்கைக்கு எதிராக 2009ம் ஆண்டு ஆடிய ஃபவாத் ஆலம், கடைசி டெஸ்ட் போட்டியையும் அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டுனெடின் மைதானத்தில் ஆடினார். 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 40.25 ஆவரேஜ் வைத்திருக்கும் ஃபவாத் ஆலம், 24 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
The last time Fawad Alam played a Test for Pakistan (in November 2009) Gordon Brown was UK Prime Minister, Italy held the football World Cup, Novak Djokovic had only won one Grand Slam title (he now has 17) & Lewis Hamilton had one F1 title (he now has six). #ENGvPAK
கடைசியாக 2015-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் ஆடினார். டி20 போட்டியில் கடைசியாக 2010ம் ஆண்டு ஆடினார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்ததையடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் ஆடும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார் ஃபவாத் ஆலம்.
Highest batting average in first-class cricket since December 2009 - when Fawad Alam last played Tests for Pakistan pic.twitter.com/PaHS3laW3p