scorecardresearch

மேட்ச் பிக்ஸிங்கில் ஆஸ்திரேலியாவை ஆட்டுவிக்கும் இந்தியர் – சல்லடை போட்டு தேடும் பிசிசிஐ

Gaurav Bhatt , Shamik Chakrabarty இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர் தான், பெரும் சர்வதேச டென்னிஸ் தொடர்களில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுபவர்களின் முக்கிய புள்ளி என ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவின் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர் என்று பி.சி.சி.ஐ.யின் உயர் ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று, சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை, விக்டோரியா காவல்துறையினர் […]

match fixing, betting, cricket bookie, cricket, ravinder dandiwal, australia cricket, match fixing, indian express, sports news, cricket news, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்
Gaurav Bhatt , Shamik Chakrabarty

இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர் தான், பெரும் சர்வதேச டென்னிஸ் தொடர்களில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுபவர்களின் முக்கிய புள்ளி என ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவின் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர் என்று பி.சி.சி.ஐ.யின் உயர் ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை, விக்டோரியா காவல்துறையினர் ரவீந்தர் தண்டிவாலை மேட்ச் பிக்சிங்கின் “முக்கிய நபர்” என்று குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. குறைந்த தரவரிசை கொண்ட டென்னிஸ் வீரர்களை போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த அணுகி, அவர்களை மூளை சலவை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யூ) தலைவர் அஜித் சிங் கூறுகையில், தண்டிவால் “ஊழலில் ஈடுபட்ட நபர்” என்பதை உறுதிப்படுத்தினார். “அவர் முதலில் சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியைச் சேர்ந்தவர், ஆனால் மத்திய கிழக்கு மற்றும் பிறஇடங்கள் என அங்கும் இங்கும் சுற்றி வருகிறார். கிரிக்கெட் லீக்குகளை ஏற்பாடு செய்பவர்களிடையே அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை ஹரியானாவில் நடந்த ஒரு தனியார் கிரிக்கெட் லீக்கில் இது தெரிய வந்தது. இதையடுத்து, அதில் பங்கேற்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ-பதிவு செய்த அனைத்து வீரர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது” என்று அவர் கூறினார்.

வாட்சனை ‘கும்பிடுறேன் சாமி’ ஆக்கிய வாஹாப் ரியாஸ் – பர்த்டே கிஃப்ட் கொடுத்த ஐசிசி

மற்றொரு ACU அதிகாரி ஒருவர் கூறுகையில், “தண்டிவாலின் புகைப்படங்கள் மூலம் ஆஸ்திரேலியாவில் மோசடிகளை நிர்ணயிக்கும்‘ இந்த நபர், இந்தியர் என்பது தெரிய வந்தது. இவரை தேசிய மற்றும் உள்நாட்டு வீரர்களை யாரும் அணுக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டிவால் மீது குற்றம் சாட்டப்படாத நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெல்போர்ன் வாசிகளான ராஜேஷ் குமார் மற்றும் ஹர்சிம்ரத் சிங் ஆகியோர், சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தி விளையாட்டுகளில் AUS $ 320,000 வரை வெல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானதாக எஸ்.எம்.எச் தெரிவித்துள்ளது.

2018 இல் பிரேசில் மற்றும் எகிப்தில் குறைந்தது இரண்டு டென்னிஸ் தொடர்களிலாவது அவர்கள் “ஊழல் செய்ததாக” விக்டோரியா காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ராஜேஷ் மற்றும் ஹர்சிம்ரத் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னவென்றால், “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் … ரவீந்தர் தண்டிவாலுடன் இணைந்து போட்டியின் முடிவைக் மாற்ற ஒப்புக் கொண்டிருந்தனர்” அல்லது வீரர்கள் “ஊழல் நடத்தையில் ஈடுபடுவதற்காக (அவரால்) நியமிக்கப்பட்டனர்” என்பதே ஆகும். பின்னர் இருவருமே முக்கிய கார்ப்பரேட் புக்கிகளுடன் இணைந்து புக்கிங்கில் ஈடுபட்டனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டறிய, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விடுத்த அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு தண்டிவால் பதிலளிக்கவில்லை.

சமூக ஊடகங்களில், அவரது புரஃபைல் லிஸ்ட்டில் “தண்டிவால் a.k.a. ஆர்.எஸ். தண்டிவால்”, “இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுச் செயலாளர்”, “கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் தலைவர்” மற்றும் அல்டிமேட் விளையாட்டு நிர்வாகத்தின் “நிர்வாக இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் சின்னம் பி.சி.சி.ஐ.யின் வடிவத்தில் சில மாற்றங்களுடன் இடம் பெற்றுள்ளது.

பி.சி.சி.ஐ.யின் ஏ.சி.யு தலைவரான சிங்கூறுகையில், “நேபாளத்தில், அவர் ஒரு லீக்கை ஏற்பாடு செய்திருந்தார், அது ஊழல் நிறைந்ததாக கூறப்படுகிறது, ஆனால் அது நமது கட்டுப்பாட்டுக்கு வெளியே நடந்த ஒன்று. அவர் ஐ.சி.சி யால் விசாரிக்கப்பட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, இந்திய வாரியம் தண்டிவால் மீது முன்பே போலீஸ் புகார் அளித்திருந்தது. “அவர் ஒரு கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றார், அங்கு ஒரு கிளப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது, அந்த அணியைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் திரும்பி வரவில்லை … காணாமல் போன வீரர்களுக்கு அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெரும் தொகை வசூலிக்கப்படுவதை நாங்கள் கண்டோம். அநேகமாக, இது ஒரு immigration மோசடி, அதனால்தான் நாங்கள் போலீசில் புகார் அளித்தோம்” என்று அவர் கூறினார்.

“அவரைப் பற்றி விசாரணைகள் நடந்துள்ளன, ஆனால் அவர் ஒரு பங்கேற்பாளர் அல்ல, எனவே அவருக்கு எதிராக நாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கை மிகக் குறைவு. டி 20 லீக்கில் (மாநில சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட) நாங்கள் நடத்திய விசாரணைகளில் அவர் மீது எதுவும் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவரைக் கண்காணிக்க முயற்சிக்கிறோம்” என்றார் சிங்.

ஷமியின் வேகத்திற்கு காரணம் இதுதான்! யாருடன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறார் பாருங்கள்

“ஆஸ்திரேலியாவில் மேட்ச் பிக்ஸிங்கிற்கு எதிராக ஒரு சட்டம் உள்ளது, மேலும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கே ஒரு சட்டம் இருந்திருந்தால், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என்று அவர் கூறினார்.

சண்டிகர் கிரிக்கெட் சுற்று வட்டாரத்தில் தண்டிவால் அறியப்படுகிறார், மேலும் பிசிசிஐ அங்கீகரிக்கப்படாத தனியார் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளையும் லீக்குகளையும் ஏற்பாடு செய்து வந்தார். வெளிநாடுகளில் டி 20 லீக்குகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடந்தபோது, தண்டிவால் ஒரு அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தண்டிவால் அங்கு இருப்பதைப் பற்றி நாங்கள் ஐ.சி.சி.க்கு அறிவித்தோம், அவர்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்தனர்,” என்று சிங் கூறினார்.

(With Nihal Koshie & Devendra Pandey)

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Fixing racket in australia is indian on bcci radar ravinder dandiwal cricket news