ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு.. முதல் டி20: வங்கதேசம் வெற்றி.. மேலும் செய்திகள்

இவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு.. முதல் டி20: வங்கதேசம் வெற்றி.. மேலும் செய்திகள்

தொடங்கியதுமகளிர்உலககோப்பைகிரிக்கெட்

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. 

Advertisment

இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மவுன்ட்மாங்கானுவில் தொடங்கிய தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹேலி மாத்யூஸ் 119 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் தஹுஹு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் டி20: வங்கதேசம் வெற்றி

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment
Advertisements

வங்கதேச தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை வங்கதேசம் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் லிடன் தாஸ் 60 ரன்கள் எடுத்தார்.

அதிகபட்சமாக ஆப்கன் தரப்பில் ஃபரூக்கி, கரிம் ஜனத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வங்கதேசம் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்கள் எடுத்தது.

ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ராட் மார்ஷ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74 ஆகும்.

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் மார்ஷ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராட் மார்ஷ் இன்று காலை காலமானார்.

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ், 1970 மற்றும் 1984 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த நேரத்தில் அது ஒரு உலக சாதனை ஆகும். மேலும் ராட் மார்ஷ் மூன்று டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்தார்.

இவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

செல்சியாகால்பந்துகிளப் விற்பனை:

உரிமையாளர்தகவல்

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கால்பந்து கிளப் செல்சியா ஆகும். தற்போது இந்த செல்சியா கால்பந்து கிளப் விற்பனைக்கு வர உள்ளது. இந்த தகவலை அதன் உரிமையாளரான ரஷியாவை சேர்ந்த ரோமன் அப்ராமோவிச் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கால்பந்து கிளப்பை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு அறக்கட்டளை அமைத்து உக்ரைன் மீதான போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸி., பாக்., முதல் டெஸ்ட்: வரலாறு காணாத பாதுகாப்பு

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் செய்து ஆடுவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் களம் காணுகிறது. 

IND vs SL: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

பாகிஸ்தான் அணி தனது கடைசி 8 டெஸ்ட் போட்டியில் 7-ல் வெற்றி கண்டு சிறப்பான நிலையில் உள்ளது. அத்துடன் உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: