Former Football captain Bhaichung Bhutia helps migrant workers and offers his building to stay : 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் வெளி மாநிலங்களில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயக்கூலிகள், தினக்கூலிகள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர். தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர் பலர். பொதுப் போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு இருக்கும் இந்நிலையில் பலரும் வெறும் கால்களில் தங்களின் சொந்த மாநிலங்களை நோக்கி நகர துவங்கியுள்ளனர்.
மேலும் படிக்க : சீனாவை கவனித்தோம், வளைகுடா நாடுகளை மறந்தோம் : இந்தியாவில் கொரோனா வீரியமான பின்னணி
டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பிகார் என அதிக தூரத்தை நடந்தே கடக்க அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் இந்நிலையில் மாற்றம் ஏதுமில்லை. தினக் கூலிகளாக அண்டை மாநிலங்களிலிருந்து பலரும் சிக்கிம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு வாழ வழியில்லாத மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயற்சிகள் மேற்கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
29ம் தேதி மாலை சிக்கிமில் இருந்து வெளியேற அந்த தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பலரும் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பைச்சுங் பூட்டியா ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சிக்கிமில் இருக்கும் அவருடைய கட்டிடத்தில் யாராவது தங்க விரும்பினால் தாராளமாக சென்று அங்கே தங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அந்த கட்டிடத்தை கட்டும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு போதுமான இடம் இல்லாமல் தவித்து வருவதால் அவர்களையும் அங்கேயே தங்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார் பைச்சுங் பூட்டியா. கொல்கத்தாவில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டு சிக்கிம் திரும்பியபோது ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மத்திய அரசு. இதனால் அவர் தன் சொந்த ஊருக்கும் போகாமல், சிக்கிமிற்கும் திரும்பி வர இயலாமல் சிலிகுரியில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் அங்கிருந்து இந்த வீடியோவை மக்களுக்காக வெளியிட்டுள்ளார். வீட்டில் இருப்பவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர் இங்கேயே தங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : மலை வழியாக எல்லையை அடைந்த தமிழர்கள்… தமிழகத்திற்கு வர 3 நாட்கள் நடந்தே வந்த கொடூரம்!