மலை வழியாக எல்லையை அடைந்த தமிழர்கள்... தமிழகத்திற்கு வர 3 நாட்கள் நடந்தே வந்த கொடூரம்!

முன் யோசனை இல்லாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கருத்து

coronavirus lockdown Tamil Nadu workers reached border after walking for three days : கொரோனாவை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த வாரம் பிறப்பித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா முழுவதும் ரயில்கள் விமானங்கள் அரசு பேருந்துகள் என அனைத்து பொது போக்குவரத்து செயல்பாடுகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. சொந்த மாநிலங்களில் இருந்து வெளியேறி, வெளி மாநிலங்களில் கூலித்தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

பலரும் தங்கள் வேலை செய்யும் மாநிலங்களை விட்டு வெளியேறி, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பேருந்துகள், ரயில்கள் என எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாமல் நடந்தே சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு மக்கள் பெரும் திரளாக நடந்து சென்றது உலக வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

மேலும் படிக்க : வீட்டு வாடகையை நாங்களே தருகின்றோம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!

இவ்வாறாக டெல்லியிலிருந்து உத்தர பிரதேசம் வந்தவர்களுக்கு கிருமி நாசினி கொண்ட நீர் தெளித்த பிறகு, அனுமதித்தது அம்மாநில அரசு. இது அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அவ்வரசுக்கு பெற்றுத் தந்தது. சக மனிதர்களை மனிதர்களாக பாவிக்காத நிலை குறித்தும், வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் வந்தவர்கள் மீது இவ்வாறு நீரைத் தெளிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர் பலரும். முன் யோசனை இல்லாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பலர் கருத்து கூறினர். இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு, இப்படி ஒரு இடம் பெயர்வு நிகழ்வு இப்போது தான் நடைபெறுகிறது.   பலரும் தென்னிந்தியாவில் இந்த நிலை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழாவில் இருந்து, அன்னாச்சிப் பழ விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயக் கூலிகள் நடந்தே வந்து தமிழக எல்லையை அடைந்துள்ளனர். 134.6 கி.மீ தூரத்தை மூன்று நாட்களாக நடந்து போடிமெட்டு வழியாக தமிழகத்தை அவர்கள் அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கும் விசயமாக இருந்தது. கேரள எல்லையில் இருந்த காவல்துறையினர் அம்மக்களுக்கு தேவையான உணவு, நீர் ஆகியவற்றை அளித்து அனுப்பி வைத்தனர். போடி மெட்டில் இருந்து அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டி செல்ல இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ?

மேலும் படிக்க : உதவி மையத்துக்கு போன் செய்து சமோசாவா கேட்பது? சாக்கடையை அள்ளவிட்ட மாவட்ட நிர்வாகம்!

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close