Advertisment

வீட்டுக்குள் முடங்கியிருக்காமல் ஓடி ஓடி உதவிய ஷாகித் அஃப்ரிடி; கொரோனா நோயால் அவதி!

வீட்டிக்குள்ளேயே முடங்கியிருக்காமல் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு முதல் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former Pakistan cricket player Shahid Afridi has infected with covid19

Former Pakistan cricket player Shahid Afridi has infected with covid19

Former Pakistan cricket player Shahid Afridi has infected with covid19  : கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்றும், உயிரிழப்புகளும் நம்மை அதிக அளவில் கவலை கொள்ள வைக்கிறது.

Advertisment

பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாட்டு தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை இந்நோய்.  கொரோனா காலத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றேன். இது மிகுந்த வலி கொண்டதாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக நான் கொரோனா நோயுக்கு ஆளாகியுள்ளேன். விரைவாக மீண்டு வர உங்களின் பிரார்த்தனைகள் தேவை என்று அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : மும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி

இந்த கொரோனா காலத்தில், வீட்டிக்குள்ளேயே முடங்கியிருக்காமல் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு முதல் அனைத்து தேவைகளையும் கொடுத்து உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் தான் இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Shahid Afridi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment