ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் ஆன்லைனில் தீவிரமாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.
கத்தாரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான போட்டியில் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்: பென் ஸ்டோக்ஸ் கேப்டனா? டோனி கூறியது என்ன? சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்
இந்தவெற்றியை அர்ஜென்டினா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அர்ஜென்டினா அணிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் செல்லாது எனவே, இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என போட்டி முடிவடைந்தது முதல் பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையதளம் இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆன்லைனில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த ஆன்லைன் மனுவில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர். அதில், அர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று மனுவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரான்ஸ் ரசிகர்கள் கூறும் முதல் காரணம், அர்ஜென்டினாவுக்கு முதல் பெனால்டி வாய்ப்பை வழங்கக் கூடாது என்பது. ஏனெனில் டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே அர்ஜென்டினா வீரர் டி மரியா மீது மோதி பந்தைக் கடத்த விடாமல் செய்ததாக அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார். இதுதான் ஆட்டத்தின் முதல் கோல்.
ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் அதை பெனால்டியாக ஏற்கவில்லை. இதற்கு ஆதாரமாக டி மரியாவைத் தொடும் காட்சிகளை பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். டி மரியா தாமாகவே கீழே விழுந்ததாக பலர் பதிவிட்டனர். இந்த பெனால்ட்டியை வழங்குவதற்கு கள நடுவர், காணொளி உதவியை நாடவில்லை என்றும் பிரான்ஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால் டெம்பாலே லேசாகத் தொட்டாலும், அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவாதம்தான் இப்போது ஆன்லைன் மனுவாக உருவெடுத்திருக்கிறது.
மேலும், இறுதிப் போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி டி மரியா இரண்டாவது கோலை அடித்தார். அவர் அர்ஜென்டினாவின் கோல் பகுதியில் இருந்து பந்தை நெடுந்தொலைவு கடத்தி வந்து கோல் அடித்தார். ஆனால் பந்தைக் கடத்திவரும்போது எம்பாப்பேவை தடுத்து ரொமேரோ ஃபவுல் செய்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் டி மரியா அடித்த இரண்டாவது கோல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இப்படி கோரிக்கை மனுக்கள் ஒரு புறம் எழுந்துக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விவாதங்கள், மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பும் பலமுறை போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிபா எடுத்ததில்லை.
இந்தநிலையில், தற்போது அர்ஜென்டினா அடித்த முதல் இரண்டு கோல்கள் மட்டுமல்லாமல் மெஸ்ஸி அடித்த மூன்றாவது கோலும் செல்லாது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தொடருகின்றன. ஆனால், கூடுதல் நேரத்தின்போது அடிக்கப்பட்ட இந்த கோலின்போது பந்து கோல் லைனை தாண்டி விட்டதால் அது செல்லக்கூடியது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
எமி மார்ட்டினஸ் சர்ச்சை
இது ஒருபுறம் இருக்க, வெற்றிக் கொண்டாடத்தின் போது ஏற்பட்ட சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன. இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தலைநகர் பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது, இரண்டாவது கோலை ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார். இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி, கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இதற்கு முன்பும் இரண்டாவது கோலை பல முறை எம்பாப்பேவை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.