Furloughed staff could work at supermarkets says cricket australia chief
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு உலகமே முடங்கிப் போயுள்ளது. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என்று அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் இந்த வருடம் நடைபெறுமா என்ற நிலைமைக்கு வந்துவிட்டது.
Advertisment
மீண்டும் எப்போது சகஜ நிலை திரும்பும், எப்போது மனித குலம் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பும் என்று எவராலும் கணிக்க முடியவில்லை.
இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது.
இதனால் அதன் பணியாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை மட்டுமே திறந்து இருக்கின்றன.
இதனால் வேலை இழந்துள்ள ஸ்டாஃப்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஜூலை 30-ம் தேதி வரை வேலைப்பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஏற்பாடு செய்து வருகிறது.
இதுதொடர்பாக வூல்வொர்த்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிஇஓ கடிதம் எழுதியுள்ளார். அதில் "உங்கள் நிறுவனத்திற்கு இதுபோன்ற நிலையில் அதிக அளவிலான ஆட்கள் வேலைக்கு தேவைப்படும். எங்களுடைய ஸ்டாஃப்கள் மற்றும் கலாசார குழு ஏற்கனவே இதுபோன்று தேவைப்படும் நிலையில் மற்ற அமைப்புகளுக்காக தற்காலிகமாக வேலை பார்த்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசு செப்டம்பர் 30-ம் தேதி வரை நாட்டின் எல்லையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”