ஒர்க் ஃபரம் ஹோமில் எல்லோரும் ஜாலியாக வேலை செய்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். முதலில் இரண்டு மூன்று நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே போகும். அதற்கு பிறகு தான் கச்சேரியே. மகனோ, மகளோ வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பெற்றோர்களோ, சொந்தங்களோ கொண்டிருந்த அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கும்.
அதாவது, ‘அன்னைக்கு நீ ஏன் அப்படி பேசுன? நீ ஏன் அப்படி நடந்துகிட்ட? என என்றோ நடந்த சம்பவத்தை கிளற, அப்போது தான் வீட்டில் வேலை செய்யும் நம்மாட்கள் ‘இது என்ன தலைவலியா போச்சு!’ என்று ஜெர்க் ஆக ஆரம்பிப்பார்கள்.
சாமானிய மக்களின் வீட்டில் தான் இந்த கூத்து என்றால், இந்திய கிரிக்கெட் அணியிலும் இதே பிரச்சனை, இதே தலைவலி இப்போது கிளம்பியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் 'டூ' சிவகார்த்திகேயன்; யாரையும் விட்டுவைக்கல - அஷ்வின் கேள்விக்கு ரசிகர்கள் பங்கம்
இந்திய அணியின் இப்போதைய பண்பாடு குறித்து இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவுடன் கடந்த வாரம் யுவராஜ் சிங் செய்த சாட் சலசலப்பை ஏற்படுத்த, இப்போது அந்த புகை மூட்டத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி இருக்கிறார் கம்பீர்.
யுவராஜ் கூறியது என்ன?
"நான் அணிக்குள் வந்த போது, நம் மூத்த வீரர்கள் ஒழுக்கமாக கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டனர்.
அதாவது மூத்த வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஊடகங்களிடம் எப்படி பேசுகிறார்கள் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் இந்தியாவில் கிரிக்கெட்டின் தூதர்களாக விளங்கினர். ஆனால் இப்போது அப்படியில்லை" என்று பேசியிருந்தார்.
தற்போது இதை ஆமோதித்து பேசியிருக்கும் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீர், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள இளைஞர்களுக்கு உள்ள ஒரு பாதகமாக சூழல் என்னவெனில், அணிக்காக தங்கள் சுய நலன்களை ஒதுக்கி வைக்கும் சீனியர் வீரர்களை பார்க்க முடியாமல் போனதே. ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, வி.வி.எஸ். லக்ஷ்மன், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற சீனியர்கள் இருந்த நேரத்தில் தான் இந்தியா அணியில் தான் விளையாடியதாக கம்பீர் கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், "யுவராஜ் சிங் கூறியதை நான் ஆமோதிக்கிறேன். தற்போதைய அணியின் மூத்தவர்கள் 2000களின் அணியில் உள்ள மூத்தவர்களைப் போல ‘தேசத்தின் தூதர்கள்’ போன்று இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். 2000 களில் அணிக்கு வழிகாட்ட டிராவிட், கும்ப்ளே, லக்ஷ்மன், சவுரவ் மற்றும் சச்சின் ஆகியோர் இருந்தனர்.
கடினமான பாதையில் செல்லும் போது, உங்களைச் சுற்றி மூத்த வீரர்களை வைத்திருப்பது முக்கியம். அப்போது தான் உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது, இந்திய அணியில் தங்கள் சுயநலத்தை ஒதுக்கி வைத்து இளைஞர்களுக்கு உதவும் போதுமான மூத்த வீரர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
'நாட்டை விட விளையாட்டு முக்கியமல்ல' - அக்தருக்கு கபில் தேவ் 'ஸ்வீட்' ரிப்ளை
பொதுவாகவே கம்பீருக்கும் தோனிக்கும் ஒரு மோதல் போக்கு உண்டு. அதை கம்பீர் மட்டுமே சில சமயங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். தோனி, அதை என்றைக்கும் காட்டிக் கொண்டதில்லை. தோனியின் எனும் தனி வீரர் கொண்டாடுப்படுவதை கம்பீர் என்றும் ரசித்ததில்லை. சில சமயங்களில் விமர்சனமும் வைத்திருக்கிறார்.
அதேபோல், கம்பீர் - கோலி மோதலை நேரில் பார்த்ததற்கு கோடிக்கணக்கான மக்களே சாட்சி. ஐபிஎல் போட்டிகள் இருவரும் ஆக்ரோஷமாக வாய் வார்த்தைகளை வீசிக் கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்தது.
எனவே, கம்பீர் மனதில் வைத்து குற்றம் சாட்டும் வீரர்களில் தோனி, கோலிக்கு நிச்சயம் இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.