அப்ரிடி மனநல மருத்துவமனைக்கு போக வேண்டியவர் : கவுதம் காம்பீர்

பாகிஸ்தானியர்கள், இந்தியாவில் மருத்துவ சேவையை பெற, இந்திய அரசு விசா வழங்கி வருகிறது

பாகிஸ்தானியர்கள், இந்தியாவில் மருத்துவ சேவையை பெற, இந்திய அரசு விசா வழங்கி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shahid afridi about gambhir

shahid afridi about gambhir

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர். அவர் ஒத்துழைத்தால், நானே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, 'Game changer' என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வீரர் காம்பீர் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க - டெல்லி vs ராஜஸ்தான் லைவ் அப்டேட்ஸ்

அதில், "கவுதம் கம்பீர் எந்த ஒரு பெரிய சாதனையும் செய்யவில்லை. ஆனால் அவர் தன் மனதில் டான் பிராட்மேன் என நினைத்து கொண்டிருக்கின்றார். கம்பீருக்கு, மற்ற வீரர்களுடன் முறையாக நடந்துகொள்வதில் பிரச்னை உள்ளது" என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அப்ரிடியின் இந்த கருத்திற்கு காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

'பாகிஸ்தானியர்கள், இந்தியாவில் மருத்துவ சேவையை பெற, இந்திய அரசு விசா வழங்கி வருகிறது. அப்ரிடி, மனநல மருத்துவமனைக்கு போக வேண்டியவர். அவர் ஒத்துழைத்தால், இந்தியாவில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தான் தயாராக இருக்கிறேன்' என்று காம்பீர் கூறியுள்ளார்.

காம்பீர், லோக்சபா தேர்தலில், கிழக்கு டில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: