‘பொய்யர்கள், துரோகிகளுக்கு எதிரில் அப்படித் தான் இருப்பேன்’ – அப்ரிடியை விளாசும் கம்பீர்

இது மற்றொரு லாக்டவுன் வாய்க்காவரப்பு சண்டை செய்தி. இந்த லாக் டவுன் எப்போது முடியும் என்பதே நாம் மட்டுமே, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸுக்கு பயந்து அல்ல. சும்மா இருக்க இருக்க, பழைய விஷயங்களை தோண்டித் துருவி பல பல பிரச்சனைகள் கிளம்பி வருவதே காரணம். இன்றைய…

By: April 19, 2020, 3:17:12 PM

இது மற்றொரு லாக்டவுன் வாய்க்காவரப்பு சண்டை செய்தி.

இந்த லாக் டவுன் எப்போது முடியும் என்பதே நாம் மட்டுமே, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸுக்கு பயந்து அல்ல. சும்மா இருக்க இருக்க, பழைய விஷயங்களை தோண்டித் துருவி பல பல பிரச்சனைகள் கிளம்பி வருவதே காரணம்.


இன்றைய இளம் இந்திய அணி சீனியர்களை மதிப்பதில்லை எனும் ரீதியில், யுவராஜ் சிங் சமீபத்தில் ரோஹித்திடம் புகார் வாசிக்க, இது என்னடா புது தலைவலியா இருக்கு-னு பிசிசிஐ முழித்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் ஐபிஎல் 2020 போட்டிகள் நடத்த வாய்ப்புள்ளதா?

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கும் இடையேயான சண்டை தற்போது இன்னமும் வளர்ந்துள்ளது.


அப்ரிடியின் சுயசரிதையில் கம்பீர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு கம்பீர் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். ஏப்ரல் 2019ல் வெளிவந்த இந்த சுயசரிதையில் கவுதம் கம்பீரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அப்ரிடி. “கவுதம் கம்பீருக்கு அவர் நடந்து கொள்ளும் விதத்தில் பிரச்சனை இருக்கிறது. அவருக்கென ஒரு ஆளுமை கிடையாது. கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கில் பார்த்தால் அவர் ஒரு ஆளே கிடையாது. உயர்ந்த சாதனைகள் இல்லை. நிறையக் கர்வம் உள்ளது. ஏதோ டான் ப்ராட்மேனும், ஜேம்ஸ் பாண்டும் சேர்ந்த கலவை போல நடந்து கொள்வார்” என்று அஃப்ரிடி எழுதியுள்ளார்.

என்ன இப்படி ஆரம்பிச்சுடாய்ங்க? – நம்பர் ’13’ தான் ஐபிஎல் தாமதத்திற்கு காரணமா?

இதற்குப் பதிலளித்துள்ள கம்பீர், “தனது வயதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாத ஒருவரால் என் சாதனைகளை எப்படி நினைவில் வைத்திருக்க முடியும்.


சரி. ஷாஹித் அப்ரிடி. ஒரே ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடின. கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள். அப்ரிடி 1 பந்தில் 0 ரன். அதை விட முக்கியமான விஷயம் நாங்கள் கோப்பையை வென்றோம். ஆம், எனக்குக் கர்வம் உண்டு. பொய்யர்கள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் எதிரில் அப்படித்தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Gautam gambhir calls afridi liar traitor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X