நம்மூரில் மட்டுமல்ல நண்பர்களே, உலகளவில் இந்த அமானுஷ்யம், பேய், பிசாசு, மண்டகசாயம் என அனைத்தையும் நம்பும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன, அவரவர்கள் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு, அதை டிசைன் டிசைனாக வெவ்வேறு வடிவங்களில் நம்புவார்கள் அவ்வளவு தான்.
பின்ன சும்மாவா பேய் படங்களுக்கு அவ்வளவு கிராக்கி இருக்குது! அதுலயும் பேய் படத்தில் காமெடியை புகுத்தி நம்ம ராகவா லாரன்ஸ் புது மருந்தை கண்டுபிடித்து, பேய்களே கைக்கொட்டி சிரிக்கும் அளவுக்கு வைத்துவிட்டார்.
'விவரிக்க முடியாததை விளக்க முடியாது; வாழ்ந்து பாருங்கள்' - 22 வயது இளைஞருடன் காதல் வயப்பட்ட நெய்மர் தாயார்
நிலைமை இப்படியாக இருக்க, கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகம் ஆகும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டதற்கு, 'நம்பர் 13' தான் காரணம் என்று சொல்லிக் கொண்டு ஒரு குரூப்பு உலவுகிறது.
அது என்னடா நம்பர் 13-ன்னு பார்த்தால், 13வது ஐபிஎல் சீசனாம். அதுக்கு என்னடா இப்ப?-னு கேட்டா, பாஸ் '13ம் நம்பர் வீடு-னு படம் இருக்கே பார்க்கலையா'-னு கேட்கிறார்கள்.
அதாவது, மேற்கத்திய நாடுகளில் 13 என்பது தீய சக்தியை அடையாளப்படுத்தும் நம்பராம். மேற்கத்திய நாட்டினைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் 87 ரன் அடிச்ச பிறகு தான் பயப்பட ஆரம்பிப்பாராம். (என்னங்கடா புதுசு புதுசா சொல்றீங்க?)
ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா! - நிலைமை தெரிந்து தான் அக்தர், அப்ரிடி பேசுகிறார்களா?
ஐபிஎல் சீசன், 13 வது தொடரை நடத்தும் போது தான் மக்கள் கொத்து கொத்தாக சாகிறார்கள் பார்த்தீர்களா? என்று விளக்கம் சொல்ல நமக்கு மயக்கமே வந்துவிட்டது.
அதுலயும் கிளைமேக்ஸில் சொன்ன விஷயம் தான் அபாரம். கொரோனா தொற்று பாதிப்பால் உலகத்தின் பல நாடுகள் லாக் டவுன் அறிவிப்பதற்கு முன்பு, கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மார்ச் '13' ம் தேதி தான் நடந்துச்சாம். இதுலிருந்தே புரியலையா பாஸ்-னு கேட்கிறாய்ங்க...
கொரோனாவுக்கு இந்த தகவல் தெரியாம பாத்துக்கணும்... அது டென்ஷனாயி நம்ம மேல ஏறிடப் போகுது!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”