Advertisment

GT vs CSK IPL 2023 Final: கடைசி பந்தில் த்ரில் வெற்றி; குஜராத்தை தகர்த்த சென்னை 5வது முறையாக சாம்பியன்

குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GT vs CSK IPL 2023 Final: கடைசி பந்தில் த்ரில் வெற்றி; குஜராத்தை தகர்த்த சென்னை 5வது முறையாக சாம்பியன்

CSK vs GT, IPL 2023 Final Match Highlights in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி நேற்று முன்தினம் இரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - விருத்திமான் சாஹா ஜோடி களமிறங்கினர். சென்னை அணி தொடக்கம் முதல் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீல்டிங்கில் சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு 2வது ஓவரிலேயே கேட்சை தீபக் சாஹர் தவற விட்டார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.

இந்த சூழலில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லின் அதிரடிக்கு தடை போட்டார். கில் 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் இருந்த விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்றது.

அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்த ஜோடியில் சஹா 54 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். பின்னர் வந்த ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 (12) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாஹர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 3 பந்துகள் வீசப்பட்டநிலையில் தீடீரென போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மைதானத்தில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி, மைதானத்தை தயார் படுத்தினர்.

மேலும், போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்றும், 20 ஓவர்களில் இருந்து 15 ஒவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. மீண்டும் களம் புகுந்த சென்னை தொடக்க ஜோடி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடியில் ருதுராஜ் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கான்வே 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 27 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் துபேவுடன் ஜோடியில் இருந்த ராயுடு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் 17 ரன்னில் ஆட்டமிழக்க, சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைபட்டது. மோஹித் சர்மா வீசிய 5வது பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா சிக்ஸர் பறக்கவிட்டார்.

ஏற்கனவே பரபரப்பில் இருந்த ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட ஜடேஜா பவுண்டரியை விரட்டி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 15 ரன்களுடனும், துபே 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

  • 01:28 (IST) 30 May 2023
    14 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ஜடேஜா - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை

  • 01:22 (IST) 30 May 2023
    13 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ஜடேஜா - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவை

  • 01:14 (IST) 30 May 2023
    10 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ரஹானே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 59 ரன்கள் தேவை

  • 01:13 (IST) 30 May 2023
    12 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ராயுடு - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவை

  • 01:13 (IST) 30 May 2023
    11 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ராயுடு - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை

    11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை

  • 01:13 (IST) 30 May 2023
    12 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ராயுடு - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவை

  • 01:09 (IST) 30 May 2023
    11 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ராயுடு - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை

  • 01:06 (IST) 30 May 2023
    ரஹானே அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ரஹானே 27 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

  • 01:03 (IST) 30 May 2023
    9 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் டெவோன் கான்வே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 72 ரன்கள் தேவை

  • 01:03 (IST) 30 May 2023
    10 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் ரஹானே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 59 ரன்கள் தேவை

  • 00:58 (IST) 30 May 2023
    9 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் டெவோன் கான்வே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 72 ரன்கள் தேவை

  • 00:52 (IST) 30 May 2023
    8 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் டெவோன் கான்வே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 77 ரன்கள் தேவை

  • 00:48 (IST) 30 May 2023
    7 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியில் டெவோன் கான்வே - துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.

    7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.

  • 00:42 (IST) 30 May 2023
    ருதுராஜ் அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் ருதுராஜ் 26 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

  • 00:37 (IST) 30 May 2023
    6 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 99 ரன்கள் தேவை

  • 00:32 (IST) 30 May 2023
    5 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 113 ரன்கள் தேவை

  • 00:28 (IST) 30 May 2023
    பவர் பிளே முடிவில் சென்னை அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 118 ரன்கள் தேவை

  • 00:27 (IST) 30 May 2023

  • 00:24 (IST) 30 May 2023
    3 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.

  • 00:17 (IST) 30 May 2023
    2 ஓவர்கள் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

  • 00:15 (IST) 30 May 2023
    முதல் ஓவர் முடிவில் சென்னை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டி மழைக்குப்பின் மீண்டும் தொடக்கம். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

  • 00:10 (IST) 30 May 2023
    போட்டி மீண்டும் தொடக்கம்; களத்தில் சென்னை - குஜராத் அணிகள்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் இன்று மீண்டு மழை குறுக்கிட்ட நிலையில், நடுவர்களின் கள ஆய்வுக்குப்பின் ஆட்டம் 20 ஓவர்களில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டு, போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது.

    சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.

  • 00:04 (IST) 30 May 2023
    சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவை!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் இன்று மீண்டு மழை குறுக்கிட்ட நிலையில், நடுவர்களின் கள ஆய்வுக்குப்பின் ஆட்டம் 20 ஓவர்களில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் 12: 10 மணிக்கு தொடங்கும். சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை அணி 4 ரன்கள் எடுத்துள்ளதால், 14.3 ஓவர்களுக்கு 167 ரன்கள் எடுக்க வேண்டும். போட்டியில் முதல் 4 ஓவர்கள் பவர்பிளேயாக இருக்கும். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 3 ஓவர்கள் மட்டுமே வீச முடியும்.

  • 00:00 (IST) 30 May 2023

  • 23:55 (IST) 29 May 2023
    சென்னையின் வெற்றிக்கு இலக்கு 171 ரன்களாக நிர்ணயிப்பு!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் இன்று மீண்டு மழை குறுக்கிட்ட நிலையில், நடுவர்களின் கள ஆய்வுக்குப்பின் ஆட்டம் 20 ஓவர்களில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் 12: 10 மணிக்கு தொடங்கும். சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 23:51 (IST) 29 May 2023
    5 ஓவர்கள் குறைப்பு; 12: 10 மணிக்கு போட்டி மீண்டும் தொடக்கம்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் இன்று மீண்டு மழை குறுக்கிட்ட நிலையில், நடுவர்களின் கள ஆய்வுக்குப்பின் ஆட்டம் 20 ஓவர்களில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் 12: 10 மணிக்கு தொடங்கும். சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 160 முதல் 170 ரன்கள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • 23:07 (IST) 29 May 2023
    நின்றது மழை : மைதானத்தில் ஆய்வு

    தற்போது அகமதாபாத்தில் மழை நின்றுவிட்ட நிலையில், மைதானம் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மைதானம் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை என்றால் போட்டி நடைபெறாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்

  • 23:06 (IST) 29 May 2023

  • 21:20 (IST) 29 May 2023
    அதிரடி காட்டிய சாய் சுதர்சன், சாஹா; சென்னைக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி, பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்களை எடுத்துள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், சாஹா 54 ரன்களும் எடுத்தனர்.

    சென்னை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாஹர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  • 21:11 (IST) 29 May 2023
    சதம் அடிக்க முயன்ற சாய் சுதர்சன் அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க முயன்ற சாய் சுதர்சன் 96 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

  • 21:07 (IST) 29 May 2023
    18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சாய் சுதர்சன் – ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது.

  • 21:06 (IST) 29 May 2023
    19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சாய் சுதர்சன் – ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்துள்ளது.

  • 21:03 (IST) 29 May 2023
    18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சாய் சுதர்சன் – ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:55 (IST) 29 May 2023
    17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சாய் சுதர்சன் - ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:50 (IST) 29 May 2023
    16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சாய் சுதர்சன் - ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:48 (IST) 29 May 2023
    சாய் சுதர்சன் அரைசதம்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. சாய் சுதர்சன் 33 பந்தில் அரைசதம் விளாசினார்.

  • 20:43 (IST) 29 May 2023
    சாஹா அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா அரைசதம் விளாசி 54 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

  • 20:36 (IST) 29 May 2023
    சாஹா அரைசதம்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா அரைசதம் விளாசி விளையாடி வருகிறார்.

  • 20:34 (IST) 29 May 2023
    13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:25 (IST) 29 May 2023
    11 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 11. ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:22 (IST) 29 May 2023
    10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:15 (IST) 29 May 2023
    9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:11 (IST) 29 May 2023
    8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்துள்ளது.

  • 20:08 (IST) 29 May 2023
    அதிரடி வீரர் கில் அவுட்; மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் ஷுப்மன் கில் 39 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜடேஜா பந்தை விரட்ட முயன்ற அவரை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் தோனி.

  • 20:02 (IST) 29 May 2023
    பவர்பிளே முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா - ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை எடுத்துள்ளது.

  • 19:57 (IST) 29 May 2023
    5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா - ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    குஜராத் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்துள்ளது.

  • 19:48 (IST) 29 May 2023
    குஜராத் பேட்டிங்; ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதனால், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா - ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

  • 19:15 (IST) 29 May 2023
    குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்!

    விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி

  • 19:14 (IST) 29 May 2023
    சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை!

    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

    ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

  • 19:13 (IST) 29 May 2023

  • 19:08 (IST) 29 May 2023
    டாஸ் வென்ற சென்னை பவுலிங்; குஜராத் பேட்டிங்!

    குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதனால், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும்.

  • 18:41 (IST) 29 May 2023
    இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்!

    குஜராத் டைட்டன்ஸ்:

    விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேதியா, நூர் அகமது, முகமது ஷமி, மொகித் ஷர்மா.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

  • 18:40 (IST) 29 May 2023
    நேருக்கு நேர்!

    ஐ.பி.எல். தொடரில் குஜராத் – சென்னை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 1-ல் சென்னையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.

  • 18:35 (IST) 29 May 2023
    இன்றும் மழை நீடித்தால் குஜராத் சாம்பியன்: விதிமுறை என்ன சொல்கிறது?

    இன்றும் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தால், கோப்பை குஜராத் அணிக்கு வழங்கப்படும்.

    https://tamil.indianexpress.com/sports/ipl-2023-who-wins-if-csk-vs-gt-final-reserve-day-is-washed-out-due-to-rain-in-tamil-681796/

  • 18:34 (IST) 29 May 2023
    அகமதாபாத் ஆடுகளம் எப்படி?

    இன்றைய இறுதிப் போட்டி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு உகந்ததாகும். இதனால் இந்த ஆடுகளத்தில் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சீசனில் இங்கு நடந்த 8 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அணி இங்கு ஆடிய 8 ஆட்டங்களில் அந்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது.

  • 18:34 (IST) 29 May 2023
    சென்னை அணிக்கு அமோக வரவேற்பு!

    குஜராத் – சென்னை அணிகளுக்கு இடையான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். முன்னதாக, மைதானத்திற்கு பேருந்தில் வந்த சென்னை அணி வீரர்களுக்கு சாலையில் இருந்தவாறு ரசிர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்ளில் வைரலாகி வருகிறது.

  • 18:26 (IST) 29 May 2023
    சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?

    நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.

    மேலும் படிக்கவும்:

    சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?

  • 18:24 (IST) 29 May 2023
    சென்னை - குஜராத் மோதல்: பரிசுத் தொகை எவ்வளவு?

    சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அதிக முறை (5 தடவை) கோப்பையை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்ய வியூகம் அமைக்கும். அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகி முதல் முயற்சியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை தனதாக்கி சாதனை படைக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சி அரங்கேறுகிறது.

  • 18:23 (IST) 29 May 2023
    இன்றும் மழை அச்சுறுத்தல்; மைதானத்தை சுத்து போடும் மேகங்கள்!

    குஜராத் – சென்னை அணிகளுக்கு இடையான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியைக் காண ஒருபுறம் ரசிகர்கள் மீண்டும் திரண்டு வருகிறார்கள். மறுபுறம் மீண்டும் வெளுத்து வாங்க மழை மேகங்கள் மெதுவாக அகமதாபாத் மைதானத்திற்கு மேல் குவியத் தொடங்கியுள்ளன.

  • 18:17 (IST) 29 May 2023
    ‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து!

    இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.

    மேலும் படிக்கவும்:-

    ‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து

  • 18:16 (IST) 29 May 2023

    அச்சுறுத்துமா சென்னையின் பந்துவீச்சு?

    சென்னை அணிக்கு பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே (21 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்), பதிரானா, தீபக் சாஹர், தீக்ஷனா ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்ககூடியவர்கள். எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் அணியை நேர்த்தியாக வழிநடத்தக்கூடிய தோனியின் தலைமை சென்னைக்கு பெரும் பலமாக இருக்கும். 41 வயதான தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவருக்காக கோப்பையை வெல்ல வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • 18:14 (IST) 29 May 2023
    அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் - மாலை 5.30 மணி!

    குஜராத் – சென்னை அணிகளுக்கு இடையான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் சூழல் மாலை 5.30 மணி நேரப்படி புகைப்படம்.

  • 18:03 (IST) 29 May 2023
    டாப் 3ல் குஜராத் பவுலர்கள்!

    பந்து வீச்சில் முகமது ஷமி (28 விக்கெட்), ரஷித் கான் (27 விக்கெட்), மொகித் ஷர்மா (24 விக்கெட்) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முறையே முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். நூர் அகமது, ஜோஷ் லிட்டில் ஆகியோரும் வலுசேர்க்கிறார்கள்.

  • 17:58 (IST) 29 May 2023
    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி: மீண்டும் திரண்ட ரசிகர்கள்!

    குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் மீண்டும் திரண்டு வருகிறார்கள். நேற்றைய நாள் தொடர் மழை போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • 17:55 (IST) 29 May 2023
    குட்டி நாடுகளின் பவுலர்களை வைத்து மிரட்டும் குஜராத்; இவங்க பெரிய பலம் இதுதான்!

    மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2ல் அடித்த சதம் உட்பட இந்த சீசனில் 3 சதங்களுடன் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரெட்-ஹாட் ஃபார்மில் உள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/csk-vs-gt-ipl-2023-final-gujarat-titans-tip-off-xi-in-tamil-680884/

  • 17:50 (IST) 29 May 2023
    மிரட்டும் குஜராத் அணியின் பேட்டிங்!

    குஜராத் அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சூப்பர் பார்மில் இருக்கிறார். ரன் குவிக்கும் எந்திரம் போல் செயல்படும் அவர் இதுவரை 3 சதம், 5 அரைசதம் உள்பட 851 ரன்கள் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (325 ரன்கள்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (317 ரன்கள்), விஜய் சங்கர் (301 ரன்கள்), சாய் சுதர்சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா போன்றோரும் மிடில் ஆடரில் பலம் சேர்க்கிறார்கள்.

  • 17:49 (IST) 29 May 2023
    IPL Final 2023: மாலையில் மேகமூட்டம், இடி இடிக்கும்; இன்றும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியை மழை பாதிக்குமா?

    ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அகமதாபாத்தில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    https://tamil.indianexpress.com/sports/ipl/ahmedabad-weather-forecast-today-for-2023-ipl-final-at-narendra-modi-stadium-681188/

  • 17:39 (IST) 29 May 2023
    இன்றும் மழைக்கு வாய்ப்பு: வெதர் ரிப்போர்ட் கூறுவது என்ன?

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, அகமதாபாத்தில் உள்ள இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத் நகரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

  • 17:26 (IST) 29 May 2023
    சி.எஸ்.கேவு-க்கு ஒருசேர பேட்டிங் தேவை!

    சென்னை அணியின் பேட்டிங் வரிசையில், டெவோன் கான்வே (15 போட்டிகளில் 625 ரன்கள், 6 அரைசதம்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (15 போட்டிகளில் 564 ரன்கள், நான்கு அரைசதம்) ஜோடி அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கி வருகின்றனர். இந்த ஐபிஎல்லில் 33 சிக்ஸர்களுடன் சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த இரண்டாவது வீரர் டுபே (15 போட்டிகளில் 386 ரன்கள், மூன்று அரைசதம்), பட்டியலில் கில் இணைந்தார்.

    இவர்களுடன் சென்னை அணியின் மிடில்ஆடரில் களமாடும் ராயுடு, ரஹானே, மொயீன் அலி போன்றோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சென்னை மேலும் வலுவான ரன்களை குவிக்கும். எனவே, இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை ஒருசேர சிறப்பாக விளையாட வேண்டும்.

  • 17:10 (IST) 29 May 2023
    வரலாற்றில் முதல் முறை; ரிசர்வ் நாளில் அரங்கேறும் இறுதிப்போட்டி!

    16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து மும்பை அணியின் சாதனையை சமன் செய்யுமா? அல்லது குஜராத் கோப்பையை தக்கவைக்குமா? என்பதை அறிய மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

  • 17:08 (IST) 29 May 2023
    விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை!

    இந்த சீசனுக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்று கிழமை) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்க இருந்த நிலையில், போட்டி தொடங்கும் முன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியது.முதலில் மிதமான மழை, அடுத்து கனமழை பின்னர் மிதமான மழை என விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. இதனால், போட்டி நடக்கவிருந்த அகமதாபாத் மைதானம் குட்டி குளம் போல் காட்சியளித்தது.

    இரவு 9:45 மணிக்குப் பிறகு ஓவர்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, 9:45 மணிக்கு 19 ஓவர், 10 மணிக்கு 17 ஓவர், 10:30 மணிக்கு 15 ஓவர்கள் வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர் மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால், குஜராத் – சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது.

  • 16:55 (IST) 29 May 2023
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Chennai Super Kings Sports Cricket Ipl Ahmedabad Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl Finals Gujarat Titans Live Updats
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment