கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மொத்தமாக மின்சார ஊழியர்கள் கணக்கிட்ட போது, வழக்கமாக வரும் கட்டணத்தைவிட மிக அதிக தொகை செலுத்த வேண்டிய நிலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
500, 600 என்று கரண்ட் பில் கட்டியவர்களுக்கு, ரூ.2000 தாண்டி மின்கட்டணம் வர அதிர்ந்து போனார்கள். இந்நிலையை, சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை சந்திக்க நேரிட்டது.
நீங்கள் கண்களால் பார்ப்பது நிஜம் – ஆனால் அனைத்தும் பொய்!
இதுகுறித்து சமூக தளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகர் பிரசன்னா, மின்வாரியத்துறை மீது குறை சொல்ல, பதிலுக்கு அவர்கள் பிரசன்னா மீது குறை கூற அமளிதுமளியானது சம்பவம்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது வீட்டின் கரண்ட் பில் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், எனக்கு 33,900 கரண்ட் பில் வந்திருக்கிறது என்றும், வழக்கமாக எனக்கு வரும் தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மும்பை மின் வாரியத்துறை, அவருக்கு அனுப்பிய மெசேஜை அப்படியே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஹர்பஜன்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கே, 33 ஆயிரம் கரண்ட் பில்லை பார்த்து ஷாக் ஆகிறார் என்றால், சாமானியர்களின் நிலையை நினைக்கவே முடியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil