கிட்டத்தட்ட 2 மாத திருவிழாவான ஐபிஎல், மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டியது. வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘தல’ என்று அடைமொழி இருந்தாலே அவுட் ஆஃப் ஆர்டரில் தான் இருப்பார்களோ!!
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்திருக்கும் பேட்டியில், “கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் தான் முக்கியம். ஆனால், இதே சூழல் நிலவியதெனில், ரசிகர்கள் இல்லாமல் வெறும் மைதானத்தில் விளையாடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒரு வீரராக, ரசிகர்களின் வைப் எனக்கு கிடைக்காது என்பதை அறிவேன். ஆனால், ஒவ்வொரு ரசிகரும் வீட்டில் அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பார்கள்.
ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதெனில், வீரர்களின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். போட்டி நடைபெறும் இடம், ஹோட்டல் அறைகள், விமானங்கள் என அனைத்தும் சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். நிலைமை சரியானது என்றால், நாம் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும்.
நான் போட்டிகளை அதிகம் இழக்கிறேன், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நான் 17 போட்டிகளில் (இறுதிப் போட்டிகள் உட்பட) விளையாடுவேன் என்று நம்புகிறேன். மைதானத்திற்கு செல்வது, எங்களை வாழ்த்த காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டங்கள், ஆகியவற்றை நான் மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு ரசிகரும் இதை தவறவிடுவார்கள் என்று உறுதியாக கூறுவேன்.
பெண்ணாசையில் சிக்கிய விளையாட்டு பிரபலம் – இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பயன்?
ஐபிஎல் விரைவில் நடக்கும் என்று நான் நம்புகிறேன், அதுவரை நான் என்னை ஃபிட்டாக வைத்திருப்பேன்” என்று 39 வயதான கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”