பெண்ணாசையில் சிக்கிய விளையாட்டு பிரபலம் – இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பயன்?

இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் லாக் டவுன் விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி மற்றும் இங்கிலாந்து கால்பந்து அணியின் டிஃபண்டர் கைல் வாக்கர் சூடான பிரச்சனையில் சிக்கி நொந்து போயுள்ளார். வாக்கர் தனது குடியிருப்பில் இரண்டு call girls-ஐ அழைத்ததாக செய்தித்தாள்களில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி…

By: April 6, 2020, 12:45:22 PM

இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் லாக் டவுன் விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி மற்றும் இங்கிலாந்து கால்பந்து அணியின் டிஃபண்டர் கைல் வாக்கர் சூடான பிரச்சனையில் சிக்கி நொந்து போயுள்ளார்.

வாக்கர் தனது குடியிருப்பில் இரண்டு call girls-ஐ அழைத்ததாக செய்தித்தாள்களில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி கிளப் அணி அவரது நடத்தை குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது உணவு பற்றியது அல்ல; உணர்வு பற்றியது – சிலாகித்த யுவராஜ் சிங் (வீடியோ)

இதுகுறித்து அந்த அணி வெளியிட்ட அறிக்கையில், “கால்பந்து வீரர்கள் உலகளாவிய முன்மாதிரியாக உள்ளனர். மேலும் COVID-19 கொரோனா வைரஸின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில் NHS மற்றும் பிற முக்கிய பணியாளர்களின் நம்பமுடியாத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக எங்கள் ஊழியர்கள் மற்றும் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்த விஷயத்தில் கைலின் நடவடிக்கைகள் இந்த முயற்சிகளை நேரடியாக மீறியுள்ளன. குற்றச்சாட்டுகளைக் கேட்டு நாங்கள் ஏமாற்றமடைகிறோம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளது.

கைல் வாக்கர் செவ்வாயன்று தனது பிளாட்டில் ஒரு நண்பருடன் தங்கியிருந்த போது, இரண்டு விலை மாதுவை ‘செக்ஸ் விருந்து’க்காக அழைத்ததன் கொரோனா வைரஸ் லாக்டவுனை மீறியதாக, பிரிட்டனின் தி சன் நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் டாக்ஸி மூலம் வாக்கரின் குடியிருப்பை அடைந்ததாக விலை மாதுவில் ஒருவர் கூறியதாக அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. வாக்கர் தனது அடையாளத்தை மறைக்க முயன்றதாகவும், அவரது பெயர் ‘கை’ என்று கூறியதாகவும் அந்த பெண் மேற்கோள் காட்டியுள்ளார்.

”ததித்திரிகிட தோனி…” ஐபிஎல் நடைபெறவில்லை என்றாலும் தோனி மீது பாசம் குறையுமா?

தி சன் பத்திரிகைக்கு கைல் வாக்கர் அளித்த பேட்டியில், “கடந்த வாரம் நான் செய்த வேலைக்கு பொது மன்னிப்பு கேட்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், கால்பந்து கிளப், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Kyle walker faces investigation breaking lockdown host sex party

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X