இந்த லாக் டவுன், குவாரண்டைன் போன்ற வார்த்தைகளை நம்மில் பலருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா. நாடு முழுவதும் நிலவும் ஊரடங்கு உத்தரவால், இந்த நொடி பெரிதும் அல்லல்பட்டுக் கொண்டிருப்போர், சென்னையில் சிக்கியிருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தான்.
அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று அரசல் புரசலாக தகவல் தெரிந்து சென்னையை விட்டு தப்பித்தோர் எஸ்கேப் ஆகிவிட்டனர். ஆனால், சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் பணி நிமித்தம் காரணமாக வெளியேற முடியாமல், இப்போது சென்னையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
”ததித்திரிகிட தோனி…” ஐபிஎல் நடைபெறவில்லை என்றாலும் தோனி மீது பாசம் குறையுமா?
அவர்களது பிரதான பிரச்சனை மட்டுமல்ல; ஒரே பிரச்சனை சாப்பாடு தான். ஹோட்டல் திறந்திருக்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், சில ஹோட்டல்காரர்கள் எதுக்கு இந்த வைரஸ் வம்பு, என்று கடைகளை திறப்பதில்லை.
இப்படி ஒரு ஏரியாவில் 10 ஹோட்டல்காரர்கள் நினைத்தால் என்ன ஆவது எண்ணிப் பாருங்கள்… உணவுக்கு பல பேச்சுலர்கள் திண்டாடும் சூழல் நிலவுகிறது.
இந்த செய்தியும் லாக் டவுன் நேரத்தில் நிகழ்ந்த உணவு தொடர்பான ஒரு உணர்வுப்பூர்வமான சம்பவம் தான். இதுகுறித்த வீடியோவை பதிவிட்டிருப்பவர் நாம யுவராஜ் சிங்.
இது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்!
அதாவது சாலையில் கதியற்று கிடப்பவர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் லாக்-டவுன் காலத்தில் உதவுவதன் அவசியத்தை உணர்ந்த போலீஸ் தன் உணவை பகிர்ந்தளித்த காட்சியை யுவராஜ் சிங் தன் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவுடன், “கடினமான இந்தக் காலங்களில் இவர்கள் காட்டும் மனிதாபிமானம் இதயத்தைக் கனியச் செய்கிறது. தங்கள் உணவை பகிர்ந்த போலீஸார் என்று ட்ரெண்டிங் ஹாஷ்டேக்குகளான “#StayHomeStaySafe” “#BeKind” என்பதையும் சேர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”