/tamil-ie/media/media_files/uploads/2020/06/a104.jpg)
hardik pandya injury, hardik pandya asia cup back injury, hardik pandya back injury, ஹர்திக் பாண்ட்யா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், hardik pandya interview, harsha bhogle interview with hardik pandya
ஹர்திக் பாண்ட்யா.... இந்திய கிரிக்கெட் அணியின் ராக்ஸ்டார் என்று ரசிகர்களாலும், ஏன் சக வீரர்களாலுமே அழைக்கப்படுபவர். இந்திய அணியின் லோ ஆர்டர் ஸ்மேஷராக தனக்கான இடத்தை சீல் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நான்காவது ஃபாஸ்ட் பவுலராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். பீலடிங்கிலும் மாஸ் தான். ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா 3டி பிளேயர்.
ஆனால், 2018ல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம், பாண்ட்யாவுக்கு அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றது.
ரஜினி 'சூப்பர் ஸ்டார்'! ஆனால் அஜித், விஜய்....? - குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்
இதுகுறித்து க்ரிக்பஸ் நிகழ்ச்சியில் ஹர்ஷா போக்ளேவிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, "உண்மையை சொல்லவேண்டுமெனில், என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நான் நினைத்தேன், ஏனென்றால் நான் யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று பார்த்ததில்லை. நான் 10 நிமிடங்கள் வெளியே இருந்தேன். அதன் பிறகு வலி ஒருபோதும் குறையவில்லை.
19, 2018It is painful to see Hardik Pandya going out of the ground in this fashion. I hope he gets better soon.#INDvPAKpic.twitter.com/EyKcnixnAh
— Rajiv Arora (@Evildoer139)
It is painful to see Hardik Pandya going out of the ground in this fashion. I hope he gets better soon.#INDvPAKpic.twitter.com/EyKcnixnAh
— Rajiv Arora (@Evildoer139) September 19, 2018
நான் நிச்சயமாக என்னை ஒரு பேக்-அப் வேகப்பந்து வீச்சாளராக பார்க்கிறேன். எனது முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் எப்படி விளையாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது ஒரு சவாலாக இருக்கும்.
பாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி - முகமது ஷமியின் 'ஓ மை கடவுளே' மொமண்ட்
“நான் ஒரு டெஸ்ட் வீரராக இருந்திருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) விளையாடாதவன் என்றால், நான் இப்போது சென்று டெஸ்ட் போட்டிகளில் ரிஸ்க் எடுக்க முடியும், ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது முக்கியத்துவத்தை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆக. இனி டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாட வாய்ப்பில்லை (அ) விருப்பமில்லை ராஜா என்று பிசிசிஐ மறைமுகமாக சிக்னல் கொடுத்துவிட்டார் பாண்ட்யா.
ப்ரோ.... அப்போ ஐபிஎல்!!?
ஐ.... அது எப்படி... அதுல கண்டிப்பா விளையாடுவோம்ல!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.