“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
ஹர்திக் பாண்ட்யா…. இந்திய கிரிக்கெட் அணியின் ராக்ஸ்டார் என்று ரசிகர்களாலும், ஏன் சக வீரர்களாலுமே அழைக்கப்படுபவர். இந்திய அணியின் லோ ஆர்டர் ஸ்மேஷராக தனக்கான இடத்தை சீல் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நான்காவது ஃபாஸ்ட் பவுலராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். பீலடிங்கிலும் மாஸ் தான். ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா 3டி பிளேயர்.
ரஜினி ‘சூப்பர் ஸ்டார்’! ஆனால் அஜித், விஜய்….? – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்
இதுகுறித்து க்ரிக்பஸ் நிகழ்ச்சியில் ஹர்ஷா போக்ளேவிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, “உண்மையை சொல்லவேண்டுமெனில், என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நான் நினைத்தேன், ஏனென்றால் நான் யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று பார்த்ததில்லை. நான் 10 நிமிடங்கள் வெளியே இருந்தேன். அதன் பிறகு வலி ஒருபோதும் குறையவில்லை.
It is painful to see Hardik Pandya going out of the ground in this fashion. I hope he gets better soon.#INDvPAK pic.twitter.com/EyKcnixnAh
— Rajiv Arora (@Evildoer139) September 19, 2018
நான் நிச்சயமாக என்னை ஒரு பேக்-அப் வேகப்பந்து வீச்சாளராக பார்க்கிறேன். எனது முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் எப்படி விளையாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது ஒரு சவாலாக இருக்கும்.
பாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்
“நான் ஒரு டெஸ்ட் வீரராக இருந்திருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) விளையாடாதவன் என்றால், நான் இப்போது சென்று டெஸ்ட் போட்டிகளில் ரிஸ்க் எடுக்க முடியும், ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது முக்கியத்துவத்தை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆக. இனி டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாட வாய்ப்பில்லை (அ) விருப்பமில்லை ராஜா என்று பிசிசிஐ மறைமுகமாக சிக்னல் கொடுத்துவிட்டார் பாண்ட்யா.
ப்ரோ…. அப்போ ஐபிஎல்!!?
ஐ…. அது எப்படி… அதுல கண்டிப்பா விளையாடுவோம்ல!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Hardik pandya injury harsha bhogle crcket news
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்
வோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்