அமெரிக்க கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் போலீஸாரால் கொல்லப்பட்டதையடுத்து உலகம் முழுதும், ‘கருப்பர் உயிர் முக்கியம்’ என்ற போராட்டக்களம் தீவிரம் அடைந்து வருகிறது. இது நிறவெறிக்கு எதிரான பெரிய குரலாக உலகம் முழுதும் ஒலித்து வருகிறது.
உலகம் முழுதும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலதுறையைச் சார்ந்தவர்களும் இதைக் கையில் எடுத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் லுங்கி இங்கிடி இதற்கு ஆதரவு தெரிவிக்க பலரும் அவரைப் பின்பற்றியுள்ளனர்.
கடந்த வாரம் லுங்கி இங்கிடி, “இது ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு நிச்சயம் நாம் ஒரு குழுவாக ஆதரவு அளிக்க வேண்டும் என நம்புகிறேன். இது உலகின் பிற பகுதிகளைப் போலவே நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என்றார்.
‘ஒரு வீரரைப் பார்த்தால் மட்டும் பயந்து நடுங்குவேன்’ – கபில் தேவ்
இதைத் தொடர்ந்து, முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரூடி ஸ்டெய்ன் பேஸ்புக்கில், “தென்னாப்பிரிக்க மக்கள் இனவெறிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவர்கள் ‘கறுப்பின வாழ்க்கை விஷயத்திற்கு’ மட்டும் துணை நிற்கிறார்கள். வெள்ளை விவசாயிகள் தினமும் விலங்குகளைப் போல ‘படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஆகையால், எனது ஓட்டு அவர்களுக்கு கிடையாது என்றார்.
போய்டா டிப்பெனார், ரூடி ஸ்டெய்ன் மற்றும் பிரையன் மெக்மில்லன் போன்ற முன்னாள் வீரர்களும், நாட்டில் பெரும்பாலும் வெள்ளை விவசாயிகளின் கொலைகள் குறித்து சமமாக குரல் கொடுக்கவில்லை என்று லுங்கி இங்கிடியை விமர்சித்தனர்.
இந்நிலையில் லுங்கி இங்கிடிக்கான தனது ஆதரவு மட்டுமல்லாமல் உலகம் முழுதுமே சாதி, மத, நிற வேறுபாடுகளின்றி இந்த நிறவெறிக்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று ஹஷிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
“இஸ்லாமிய மரபில் முதல் மனிதன் ஆதாம் கருப்புத் தோலுடையவர்தான். எனவே மானுடகுலத்துக்கே இந்தப் பாரம்பரியத்தின் ஆழமான வேர் இருக்கிறது. அதனால் கருப்பு என்று கூறுவதால் கிலேசமடையத் தேவையில்லை.
மேலும் ஒரு சாதிக்கு எதிராக இன்னொரு சாதி, ஒரு நிறத்துக்கு எதிராக இன்னொரு நிறம் என்று மனிதர்களில் பாகுபாடு காட்டுவது கூடாது.
ஆனால் நான் உட்பட நம்மில் பலர் இந்த பாகுபாடுகளின் வசைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டுள்ளோம். ஆகவே லுங்கி இங்கிடி போன்ற விதிவிலக்கான இளைஞர்கள் எங்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்வதை வரவேற்கிறோம். நன்றி சகோதரா.
தோனியுடன் பேட் செய்வதே எனக்கு ஈஸி – சவுத்பா பண்ட்
இந்த நாட்டிலும் உலகம் முழுதும் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகம். அனைத்து நிறங்களிலும் அனைத்து துறைகளிலும் ஒடுக்குதல் உள்ளது. கிரிக்கெட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கருப்பர்கள்தான் கொடுமைகளை அதிகம் அனுபவித்துள்ளனர். ஆனால் பலர் வேறு வகையில் தங்களை திருப்திப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி என்னவெனில், ‘நிறவெறியை அனுபவித்து அதைப்பற்றி தெரிந்தவர்களும், தெரியாத நீங்களும் ஒன்றா?’ என்ற கேள்வியையே.
ஏன் ’கருப்பர்கள் உயிர் முக்கியம்’ எங்களுக்கு முக்கியமானது எனில் நாங்கள் அனைவரும் கருப்பர்களே.
உலகில் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்காகவும் நான் நிற்கிறேன் அதனால்தான் லுங்கி இங்கிடிக்காகவும் நான் நிற்கிறேன்.” என்று ஹஷிம் ஆம்லா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil