அநியாயத்துக்கு நல்ல கேப்டனாக ரோஹித் ஷர்மா – வேற லெவல் ஸ்பீச்

நாம் நாமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் அப்படியும் கோபம் வரும்

By: August 5, 2020, 11:00:52 PM

ஐபிஎல் தொடராகட்டும், சர்வதேச தொடராகட்டும் ஒரு கேப்டனாக ரோஹித்தின் பங்கு கோலியை விட மிகப்பெரியது. விராட் கோலி 3 வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதால் அதிக கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்பில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் ரோஹித்.

விராட் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத நிலையில், 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் வென்றிருக்கிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மா பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நாம் கேப்டனா.. நமக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்ளக் கூடாது என்ற கோட்பாட்டை நம்புபவன் நான்.

‘வாழ்க்கை ஒரு வட்டம்’ 2.0 வெர்ஷன் – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்!

பெரிய அளவில் வைத்து யோசித்தால் மற்ற வீரர்கள்தான் முக்கியம். ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு விதமாக இது வேலை செய்யும், ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒருவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில், அவரே அணியின் மிகவும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட நபராக இருக்க வேண்டும்.

கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சுயக்கட்டுப்பாடுடைய முயற்சி. நாம் நாமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் அப்படியும் கோபம் வரும், நிதானத்தை இழப்போம், ஆனால் சக வீரர்களிடத்தில் நம் கோபத்தைக் காட்டக் கூடாது. நம் உணர்வை மறைத்துக் கொள்வது முக்கியமானது” என்றார் ரோஹித் சர்மா.

ரெய்னா புகழாரம்

முன்னதாக, சூப்பர் ஓவர் நிகழ்ச்சிக்காக சுரேஷ் ரெய்னா கூறும்போது, “ரோஹித் சர்மா இந்திய அணியின் அடுத்த தோனி என்று நான் நினைக்கிறேன்.

தோனி போலவே அமைதியாக இருக்கிறார், அடுத்தவர் பேச்சை கூர்ந்து கவனிக்கிறார். வீரர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார். அதோடு மட்டுமல்லாமல் முன்னின்று வழிநடத்துகிறார்.

இப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்!? (வீடியோ)

ஒரு கேப்டன் முன்னின்று வழிநடத்துகிறார் மேலும் ஓய்வறை சூழ்நிலையும் கெடாமல் பாதுகாக்கிறார் என்றால் அவர் அனைத்துக்கும் தகுதியானவர்தான்.

அணியில் அனைவருமே கேப்டன் என நினைக்கிறார் ரோஹித் சர்ம, நான் அவர் கேப்டன்சியில் பங்களாதேஷில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடியிருக்கிறேன். ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், சாஹல் போன்ற இளம் வீரர்களுக்கு அவர் எப்படி தன்னம்பிக்கை ஊட்டுகிறார் என்று நான் கவனித்தேன்” என்று ரோஹித்தை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:I am the least important person in team rohit sharma cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X