டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணி 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தையும், நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், இந்திய அணி 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
தெலுங்கு ஹிட் பாடலுக்கு குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர் - வீடியோ
கடந்த 4 வருடங்களில் கோலி தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முதலிடத்தில் இருந்து வந்தது இந்திய அணி.
1, 2020
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் - அணிகள்
1) ஆஸ்திரேலியா - 116
2) நியூசிலாந்து - 115
3) இந்தியா - 114
4) இங்கிலாந்து - 105
5) இலங்கை - 91
6) தென்னாப்பிரிக்கா - 90
7) பாகிஸ்தான் - 86
8) மேற்கிந்திய தீவுகள் - 79
9) ஆப்கானிஸ்தான் - 57
10) வங்கதேசம் - 55
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை இழந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் தான் இருந்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 போட்டிகளில் 7 வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது இந்திய அணி.
கோலி முதல் அஷ்வின் வரை - ரிஷி கபூருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விளையாட்டு பிரபலங்கள்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்
1) இந்தியா - 360
2) ஆஸ்திரேலியா - 296
3) நியூசிலாந்து - 180
4) இங்கிலாந்து - 146
5) பாகிஸ்தான் - 140
6) இலங்கை - 80
7) தென்னாப்பிரிக்கா - 24
8) மேற்கிந்திய தீவுகள் - 0
9) வங்கதேசம் - 0
1, 2020
அதேபோல், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 116, தென்னாப்பிரிக்கா 108, ஆஸ்திரேலியா 107 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”