டெஸ்ட் பக்கா; ஒன் டே ஓகே; டி20 ஆவரேஜ் – ரேங்கிங்கில் தடுமாறும் இந்தியா!

டி20 பவுலிங்கில் முதல் இரண்டு இடத்திலும் ஆப்கன் பவுலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது

டெஸ்ட் அணி தரவரிசையிலும் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது

ICC Rankings: ஐசிசி தரவரிசை இன்று (ஆக.26) வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் ஷர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் மூன்றாம் இடத்திலும், சோழர் காலத்தில் இருந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும் நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் டூ பிளசிஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.

கோலி, ரோஹித் தவிர டாப் 10 தரவரிசையில் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் டிரெண்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நம்ம பையன் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ஈரோடு கைத்தறி போர்வையில் தோனியும் ஸிவாவும் : இது போன்ற ரசிகர்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை!

ஆப்கன் இளம் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருப்பது சர்பிரைஸ். பேட் கம்மின்ஸ், காகிஸோ ரபாடா முறையே 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.

பும்ரா தவிர வேறு எந்த பவுலரும் டாப் 10 தரவரிசையில் இல்லை.

ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. உலக சாம்பியன் இங்கிலாந்து தான் நம்பர்.1

சர்பிரைஸ் தரும் டி20 ரேட்டிங்ஸ்:

பாகிஸ்தானின் பாபர் அசம் 879 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், லோகேஷ் ராகுல் 823 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 10வது இடத்தில் உள்ளார்.

ரோஹித் எங்கடா?

பந்துவீச்சு தரவரிசையில் 736 புள்ளிகளுடன் ரஷீத் கான் முதலிடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் 730 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

டி20 பவுலிங்கில் முதல் இரண்டு இடத்திலும் ஆப்கன் பவுலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஒரு இந்திய பவுலர் கூட டாப் 10ல் இல்லை.

டி20 அணி தரவரிசையில் இந்தியா முன்றாம் இடம். ஆஸி., நம்பர்.1 மற்றும் இங்கிலாந்து நம்பர்.2

டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட் – ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! (வீடியோ)

டெஸ்ட் ரேட்டிங்ஸ்:

பேட்டிங்கில் 911 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், 886 புள்ளிகளுடன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஆஸி., அணியின் மார்னஸ் 3வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 4வது இடத்திலும், பாபர் அசம் 5வது இடத்திலும் உள்ளனர். புஜாரா 7வது இடத்திலும், ரஹானே 10வது இடத்திலும் உள்ளனர்.

பவுலிங்கில், பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 845 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் பும்ரா 9வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணி தரவரிசையிலும் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. ஆஸி., முதல் இடத்திலும், நியூஸி., 2ம் இடத்திலும் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icc rankings india odi test t20 rankings

Next Story
ஈரோடு கைத்தறி போர்வையில் தோனியும் ஸிவாவும்!Chennimalai weaver made handwoven gift for cricketer MS Dhoni
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com