IND vs AUS 1st ODI Online Streaming: 'அரை மணி நேரமா அக்னி குண்டத்துல இருந்தும் வெடிக்காததுக்கு பேரு வெடிகுண்டா?? இது வெறும் குண்டு டா'-னு நம்ம குருநாதர் சொன்னது போல, சமீபத்திய வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்கள் இந்திய ரசிகர்களுக்கு சப்பென்று இருந்தது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
ஆனால், நாளை(ஜன.14) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் ஒருநாள் தொடர், இந்திய அணியின் ரியல் பலத்தை ஏகத்துக்கும் டெஸ்ட் செய்யும் தொடராக அமையவிருக்கிறது.
Ind vs Nz Series 2020: நோ தோனி, நோ சஞ்சு - நியூசிலாந்துக்கு இந்த டீம் போதுமா?
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில், முதல் ஒருநாள் போட்டி, நாளை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
கேப்டன் ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபஸ்கேக்னே, அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் என்று டெத் ரேஸ் அணியை களமிறக்கியிருக்கிறது ஆஸ்திரேலியா.
இந்திய அணி என்னதான் பலமிக்க அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலியா என்ற இண்டர்நேஷனல் ஹைவேஸில் அவ்வளவு எளிதாக பயணித்துவிட முடியாது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என்ற வலுவான பேட்டிங் லைன் அப் இருக்கிறது.
ஆனால், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் போன்ற யார்க்கர் பிசாசுகளை எப்படி சாம்பிராணி போட்டு சமாளிக்கப் போகிறார்கள் என்பது சுவாரஸ்யமே.
பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இதுக்கு பேரு கேட்ச்சா?' அல்லது 'இதுவும் கேட்ச்சா?' - பிக்பேஷ் கேட்ச் இப்போது பஞ்சாயத்து வரை...
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.