Advertisment

WTC Final Highlights: உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா; 209 ரன்களில் இந்தியா தோல்வி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs AUS Live Score | India vs Australia Live Score | WTC Final 2023 Live Score

இந்தியா vs ஆஸ்திரேலியா WTC ஃபைனல் 2023 ஸ்கோர்

IND vs AUS WTC Final, Cricket Live Score: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி இந்தியா 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.

Advertisment

பின்னர், 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து 296 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இன்று 4ம் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அதன் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil



  • 18:34 (IST) 11 Jun 2023
    உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா; 209 ரன்களில் இந்தியா தோல்வி

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கியது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கில் 469 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், வார்னர் 43 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, தாகூர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், இறுதியில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 82 ரன்களும், தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும், எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், போலன்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லயன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிச்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அலெக்ஸ் கேரி 66 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

    வெற்றி இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று தொடங்கிய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்று அசத்தியது.

    முதல் இன்னிங்சில் 163 ரன்கள் குவித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில்,

    எங்களின் வேகப்பந்துவீச்சு கைகொடுக்காது என்று நினைத்தேன். 4-வது மற்றும் 5-வது நாள் மைதானம் கொஞ்சம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று யோசித்தோம். ஆனாலும் மைதானத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட போலண்ட் அசத்தலாக பந்துவீசினார். இந்த விக்கெட்டில் கொஞ்சம் புல் உள்ளது, அதனால் விக்கெட் வீழ்த்த அவர் ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தார். நாங்கள் இங்கு வந்து சுமார் 10 நாட்கள் ஆகிறது. வானிலை நன்றாக உள்ளது, இந்த போட்டியில் நாங்கள் எந்த செசனையும் தவறவிடவில்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

    நிலைமைகள் மற்றும் வானிலை மேகமூட்டமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தோம். ஆனால் ஆடுகளம் பெரிதாக மாறும் என்று நினைக்கவில்லை. நன்றாக விளையாடி மேலே வர வேண்டும் என்று நினைத்தோம். நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்று களமிறங்கினோம். ஆனால் எப்போதும் அஸ்வினை விட்டு களமிறங்குவது கடினமானது. அவர் பல வருடங்களாக எங்களுக்கு மேட்ச் வின்னராக இருந்துள்ளார். ஆனால் அணிக்கு தேவையான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதால், இறுதியில் அவரை சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். ரஹானே நிறைய அனுபவங்களுடன் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் சில மாதங்கள் அணியில் இல்லாவிட்டாலும் அவரது அனுபவம் சரியான நேரத்தில் கைகொடுத்தது என்று கூறியுள்ளார்.



  • 18:33 (IST) 11 Jun 2023
    உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா; 209 ரன்களில் இந்தியா தோல்வி

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கியது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கில் 469 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், வார்னர் 43 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, தாகூர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், இறுதியில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 82 ரன்களும், தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும், எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், போலன்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லயன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிச்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அலெக்ஸ் கேரி 66 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

    வெற்றி இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று தொடங்கிய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்று அசத்தியது.

    முதல் இன்னிங்சில் 163 ரன்கள் குவித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில்,

    எங்களின் வேகப்பந்துவீச்சு கைகொடுக்காது என்று நினைத்தேன். 4-வது மற்றும் 5-வது நாள் மைதானம் கொஞ்சம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று யோசித்தோம். ஆனாலும் மைதானத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட போலண்ட் அசத்தலாக பந்துவீசினார். இந்த விக்கெட்டில் கொஞ்சம் புல் உள்ளது, அதனால் விக்கெட் வீழ்த்த அவர் ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தார். நாங்கள் இங்கு வந்து சுமார் 10 நாட்கள் ஆகிறது. வானிலை நன்றாக உள்ளது, இந்த போட்டியில் நாங்கள் எந்த செசனையும் தவறவிடவில்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

    நிலைமைகள் மற்றும் வானிலை மேகமூட்டமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தோம். ஆனால் ஆடுகளம் பெரிதாக மாறும் என்று நினைக்கவில்லை. நன்றாக விளையாடி மேலே வர வேண்டும் என்று நினைத்தோம். நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்று களமிறங்கினோம். ஆனால் எப்போதும் அஸ்வினை விட்டு களமிறங்குவது கடினமானது. அவர் பல வருடங்களாக எங்களுக்கு மேட்ச் வின்னராக இருந்துள்ளார். ஆனால் அணிக்கு தேவையான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதால், இறுதியில் அவரை சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். ரஹானே நிறைய அனுபவங்களுடன் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் சில மாதங்கள் அணியில் இல்லாவிட்டாலும் அவரது அனுபவம் சரியான நேரத்தில் கைகொடுத்தது என்று கூறியுள்ளார்.



  • 17:09 (IST) 11 Jun 2023
    209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

    5-வது மற்றும் கடைசி நாளில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 7 விக்கெட்டுகள் கைவசம் வைத்துக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 234 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியது.



  • 16:43 (IST) 11 Jun 2023
    தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

    கடைசி நாளில் 280 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பரத் 22 ரன்களுடன் விளையாடி வருகிறார்.



  • 16:35 (IST) 11 Jun 2023
    அரைசதத்தை மிஸ் செய்த ரஹானே

    முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்து அசத்திய ரஹானே 2-வது இன்னிங்சில் அரைசதத்தை நெருங்கிய நிலையில், 46 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.



  • 16:18 (IST) 11 Jun 2023
    தடுமாறும் இந்தியா : ரஹானே நங்கூரம்

    அரை சதத்தை நெருங்கிய விராட் கோலி 49 ரன்களில் போலாண்ட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 2 பந்துகளைச் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். ஆனாலும் முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்த ரஹானே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.



  • 15:43 (IST) 11 Jun 2023
    அடுத்தடுத்து விக்கெட் சரிவு; தடுமாறும் இந்தியா

    அரை சதத்தை நெருங்கிய விராட் கோலி 49 ரன்களில் அவுட் ஆனார். அவர் போலாண்ட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 2 பந்துகளைச் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். அவர் போலாண்ட் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது பரத் களமிறங்கியுள்ள நிலையில், இந்திய அணி 47 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது



  • 22:42 (IST) 10 Jun 2023
    கோலி – ரகானே சிறப்பான ஆட்டம்; கடைசி நாளில் இந்தியா வெற்றிக்கு 280 ரன்கள் இலக்கு

    இன்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 40 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி வெற்றிக்கு கடைசி நாளில் 280 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியில் கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. கோலி 44 ரன்களுடனும், ரகானே 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்



  • 21:44 (IST) 10 Jun 2023
    அடுத்தடுத்து விக்கெட் சரிவு; தடுமாறும் இந்தியா

    நிதானமாக ஆடி வந்த புஜாரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் கம்மின்ஸ் பந்தில் கேரியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக ரஹானே களமிறங்கியுள்ளார். இந்திய அணி 28 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது



  • 21:08 (IST) 10 Jun 2023
    ரோகித் அவுட்; இந்தியா சிறப்பான ஆட்டம்

    சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சுழற்பந்துவீச்சாளர் லியான் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். ரோகித் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசினார். அடுத்ததாக கோலி களமிறங்கியுள்ளார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது



  • 20:11 (IST) 10 Jun 2023
    சுப்மன் கில் அவுட்; இந்தியா நிதான ஆட்டம்

    இந்தியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். கில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் போலாண்ட் பந்தில் கிரீன் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக புஜாரா களமிறங்கியுள்ள நிலையில், இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது



  • 19:25 (IST) 10 Jun 2023
    ஆஸி 270 ரன்களுக்கு டிக்ளேர்; இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு

    ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. ஆஸி அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. எனவே இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 18:55 (IST) 10 Jun 2023
    பாட் கம்மின்ஸ் அவுட்; ஆஸி 270/8

    ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஷமி பந்தில் அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.



  • 18:44 (IST) 10 Jun 2023
    ஸ்டார்க் அவுட்; ஆஸி 260/7

    மிட்செல் ஸ்டார்க் 41 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஷமி பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டார்க் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார். ஆஸ்திரேலியா அணி 83 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

    500 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



  • 18:16 (IST) 10 Jun 2023
    அலெக்ஸ் கேரி அரை சதம்; 400 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற ஆஸி.,

    அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி 77 ஓவர்களுக்குப் பிறகு 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி 400 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது



  • 17:22 (IST) 10 Jun 2023
    4ம் நாள் மதிய இடைவேளையின் போது ஆஸி,.!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இன்று 4ம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், மதிய இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 41 ரன்னுடனும், ஸ்டார்க் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



  • 16:51 (IST) 10 Jun 2023
    கிரீன் அவுட்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இன்று 4ம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், களத்தில் இருந்த அலெக்ஸ் கேரி – கேமரூன் கிரீன் ஜோடியில் கிரீன் ஜடேஜா பந்து வீச்சில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



  • 16:13 (IST) 10 Jun 2023
    தேநீர் இடைவேளை!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்று 4ம் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 58 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை சேர்த்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் (21 ரன்) - அலெக்ஸ் கேரி (15 ரன்) ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 15:20 (IST) 10 Jun 2023
    4ம் நாள் ஆட்டம் இனிதே ஆரம்பம்... ஆஸி,. பேட்டிங்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்து 296 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 15:19 (IST) 10 Jun 2023
    லாபுசாக்னே அவுட்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் ஜோடியில் லாபுசாக்னே உமேஷ் யாதவ் பந்து வீச்சில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



  • 15:10 (IST) 10 Jun 2023
    4ம் நாள் ஆட்டம் இனிதே ஆரம்பம்... ஆஸி,. பேட்டிங்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்து 296 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 22:46 (IST) 09 Jun 2023
    3-வது நாள் ஆட்டம் நிறைவு : ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் முன்னிலை

    173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லபுசேசன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 21:45 (IST) 09 Jun 2023
    ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் முன்னிலை

    173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று முன்வரை 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போதுவரை ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது



  • 20:36 (IST) 09 Jun 2023
    2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

    173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று முன்வரை 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 1 ரன்னிலும், கவாஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், லபுசேசன் 16 ரன்களுடனும், ஸ்மித் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 19:25 (IST) 09 Jun 2023
    டேவிட் வார்னர் அவுட்

    173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்



  • 19:02 (IST) 09 Jun 2023
    இந்தியா 296 ரன்களுக்கு ஆல்அவுட் : ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கில் 469 ரன்கள் குவித்தது. ஸ்மித் 128 ரன்களும், ஹெட் 161 ரன்களும் குவித்தனர்.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் பொலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லையன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.



  • 18:31 (IST) 09 Jun 2023
    அரைசதம் கடந்த ஷர்துல் தாகூர் அவுட்

    ரஹானே ஷர்துல் தாக்கூருடன் ஜோடி அமைத்தார். இந்த நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில், 129 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 89 ரன்கள் எடுத்த ரஹானே கம்மின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த ஷர்துல் தாகூர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்



  • 18:17 (IST) 09 Jun 2023
    சதத்தை தவற விட்ட ரஹானே

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்று 3ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் நேற்று ரஹானேவுடன் ஜோடியில் இருந்த பரத் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ரஹானே ஷர்துல் தாக்கூருடன் ஜோடி அமைத்தார். இந்த நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில், 129 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 89 ரன்கள் எடுத்த ரஹானே கம்மின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



  • 17:10 (IST) 09 Jun 2023
    ரஹானே – ஷர்துல் ஜோடி சிறப்பான ஆட்டம்: மதிய உணவு இடைவேளை!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்று 3ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் நேற்று ரஹானேவுடன் ஜோடியில் இருந்த பரத் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ரஹானே ஷர்துல் தாக்கூருடன் ஜோடி அமைத்தார். இந்த நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வருகிறது.

    தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹானே 92 பந்துகளில் அரைசதம் விளாசினார். தற்போது ரஹானே 89 ரன்களுடனும், தாக்கூர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி மதிய உணவு இடைவேளையின் போது 60 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:50 (IST) 09 Jun 2023
    சிறப்பான ஆட்டம்... ஆஸி,.-க்கு தண்ணி காட்டும் ரஹானே அரைசதம்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த ரஹானே – ஸ்ரீகர் பரத் ஜோடியில், பரத் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இருப்பினும், தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வரும் ரஹானே 92 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். 46 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:15 (IST) 09 Jun 2023
    3ம் நாள் இனிதே தொடக்கம்... ஸ்ரீகர் பாரத் அவுட்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த ரஹானே - ஸ்ரீகர் பரத் ஜோடியில், பரத் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தற்போது களத்தில் ரஹானே - ஷர்துல் தாக்கூர் ஜோடி விளையாடி வருகின்றனர். 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.



  • 22:51 (IST) 08 Jun 2023
    2-வது நாள் ஆட்டம் முடிவு : இந்திய அணி 151/5

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சதமடித்த டிராவிஸ் ஹெட் 161 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும், வார்னர் 43 ரன்களும் குவித்தனர்.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 15, கில், 13, புஜாரா 14, விராட்கோலி, 14, ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய ஜடேஜா 51 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி விரைவாக ரன் குவிப்பது அவசியம்.



  • 22:15 (IST) 08 Jun 2023
    அரைசதத்தை மிஸ் செய்த ஜடேஜா

    ஐபிஎல் ஃபார்மை தொடர்ந்த ரவீந்திர ஜடேஜா 51 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



  • 22:07 (IST) 08 Jun 2023
    இந்திய அணி 133/4

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா - ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளது. தற்போது இந்திய அணி 133/4



  • 21:02 (IST) 08 Jun 2023
    முன்னாள் கேப்டன் விராட்கோலி ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 14 ரன்கள் எடுத்திருந்த முன்னாள் கேப்டன் விராட்கோலி ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போது 87/4



  • 20:28 (IST) 08 Jun 2023
    3-வது விக்கெட்டை இழந்த இந்தியா 57/3

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களுக்கும், சுப்மான் கில் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், தற்போது புஜரா 14 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணி 57/3



  • 19:33 (IST) 08 Jun 2023
    அடுத்தடுத்து 2 விக்கெடடுகளை பறிகொடுத்த இந்தியா

    அதிரடியாக முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களுக்கும், சுப்மான் கில் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா (1), கோலி (4) ஜோடி விளையாடி வருகிறது



  • 19:11 (IST) 08 Jun 2023
    இந்திய அதிரடி தொடக்கம்

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி 4 ஓவர்களில் விக்கடெ் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.



  • 18:43 (IST) 08 Jun 2023
    ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல்அவுட்

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.



  • 18:16 (IST) 08 Jun 2023
    8-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் வலுவான நிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணியில், மீச்செல் ஸ்டார்க் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தற்போது 455/8



  • 17:43 (IST) 08 Jun 2023
    ஓவலில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டவர்கள்… இந்திய வீரர் யார் தெரியுமா?



    லண்டன் ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/wtc-final-2023-visiting-batsmen-with-most-test-runs-at-the-oval-in-tamil-690944/



  • 17:12 (IST) 08 Jun 2023
    மதிய உணவு இடைவேளை: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    தற்போது மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 109 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் அலெக்ஸ் கேரி 22 ரன்னுடனும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 ரன்னுடனும் உள்ளனர்.



  • 16:43 (IST) 08 Jun 2023
    மிட்செல் ஸ்டார்க் அவுட்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் செய்த மிட்செல் ஸ்டார்க் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தற்போது களத்தில் அலெக்ஸ் கேரி – பேட் கம்மின்ஸ் ஜோடி விளையாடி வருகின்றனர். 105 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்துள்ளது.



  • 16:18 (IST) 08 Jun 2023
    சதமடித்த ஸ்மித் அவுட்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்த ஸ்மித் ஆட்டமிழந்தார். 268 பந்துகளில் 19 பவுண்டரிகளை விரட்டிய அவர் 121 ரன்கள் எடுத்த நிலையில் தாக்கூர் பந்தில் அவுட் வெளியேறினார்.

    தற்போது களத்தில் அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் ஜோடி விளையாடி வருகின்றனர். 99 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:54 (IST) 08 Jun 2023
    கேமரூன் கிரீன் அவுட்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. டிராவிஸ் ஹெட் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய கேமரூன் கிரீன் ஒரு பவுண்டரியை விரட்டி 6 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



  • 15:48 (IST) 08 Jun 2023
    அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் அவுட்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடி டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். 174 பந்துகளை எதிகொண்ட அவர் 25 பவுண்டரிகள் 1 சிக்ஸர் 163 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



  • 15:20 (IST) 08 Jun 2023
    2ம் நாள் ஆட்டம் இனிதே தொடக்கம்... ஸ்மித் சதம் விளாசி மிரட்டல்

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நேற்றைய ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஹெட் – ஸ்மித் ஜோடி இன்று களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இந்த ஜோடியில் நேற்று 95 ரன்களுடன் இருந்த ஸ்மித் சதம் விளாசினார்.

    தற்போது 89 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 153 ரன்களுடனும், ஸ்மித் 103 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 15:20 (IST) 08 Jun 2023
    2ம் நாள் ஆட்டம் இனிதே தொடக்கம்... ஸ்மித் சதம் விளாசி மிரட்டல்

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நேற்றைய ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஹெட் – ஸ்மித் ஜோடி இன்று களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இந்த ஜோடியில் நேற்று 95 ரன்களுடன் இருந்த ஸ்மித் சதம் விளாசினார்.

    தற்போது 89 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 153 ரன்களுடனும், ஸ்மித் 103 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 22:44 (IST) 07 Jun 2023
    ஹெட் – ஸ்மித் ஜோடி அபாரம்; முதல் நாள் முடிவில் ஆஸி., 327/3

    ஹெட்- ஸ்மித் ஜோடியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 21:09 (IST) 07 Jun 2023
    ஹெட் சதம் - ஸ்மித் அரை சதம்; வலுவான நிலையில் ஆஸி.,

    சிறப்பாக விளையாடி டிராவிஸ் ஹெட் 107 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் ஆடிய ஸ்மித் அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியா அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது



  • 20:21 (IST) 07 Jun 2023
    ஹெட்- ஸ்மித் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; வலுவான நிலையில் ஆஸி.,

    ஹெட்- ஸ்மித் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. ஆஸ்திரேலியா 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது



  • 19:37 (IST) 07 Jun 2023
    ஹெட் அரை சதம்; சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வரும் ஆஸி.,

    டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். இது அவருடைய 14வது டெஸ்ட் அரைசதம் மற்றும் இது வெறும் 60 பந்துகளில் வந்துள்ளது. 44 ஓவர்களில் ஆஸ்திரேலியா 160/3 ரன்களுடன் விளையாடி வருகிறது



  • 19:16 (IST) 07 Jun 2023
    ஸ்மித்-ஹெட் சிறப்பான ஆட்டம்

    ஸ்மித்-ஹெட் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா எளிதாக ரன்களை சேர்த்து வருகிறது. ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் 14 ஓவர்களில் 13 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்துள்ளனர். ஷமி மற்றும் சிராஜ் 23 ஓவர்களில் 9 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்துள்ளனர்



  • 18:40 (IST) 07 Jun 2023
    ஸ்மித் நிதானம்... ஹெட் அதிரடி

    35 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 15 ரன்களிலும், ஹெட் 31 (27) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 18:39 (IST) 07 Jun 2023
    மார்னஸ் லாபுசாக்னே அவுட்

    நிதானமாக விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 26 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 5 ரன்களிலும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 17:57 (IST) 07 Jun 2023
    மார்னஸ் லாபுசாக்னே அவுட்

    நிதானமாக விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 26 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 5 ரன்களிலும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 17:21 (IST) 07 Jun 2023
    அரைசதத்தை கோட்டைவிட்ட வார்னர்

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் நிதானமாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய வார்னர் 43 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



  • 16:50 (IST) 07 Jun 2023
    21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. அரைசதத்தை நெருங்கியுள்ள வார்னர் 39 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 16:33 (IST) 07 Jun 2023
    பவுன்ஸ் அதிகம், பவுலர்களின் நண்பன்… WTC-ல் டியூக்ஸ் பந்தின் தாக்கம் எப்படி இருக்கும்?

    டியூக்ஸ் மற்றும் எஸ்.ஜி ஆகிய இரண்டுமே கையால் தைக்கப்பட்ட பந்துகள். மேலும் பந்து வீச்சாளர்களுக்கு நீண்ட நேரம் உதவுகின்றன. இதற்கு நேர்மாறாக, கூகாபுரா இயந்திரத்தால் தைக்கப்பட்டது.

    https://tamil.indianexpress.com/sports/wtc-final-how-the-dukes-ball-will-impact-the-game-in-tamil-689726/



  • 16:22 (IST) 07 Jun 2023
    15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 37 ரன்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே 16 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 16:04 (IST) 07 Jun 2023
    ஓவல் பிட்ச் இந்தியாவுக்கு சாதகம்; ஆஸி.-க்கு பாதகம்: சச்சின் கூறும் காரணம்!



    சுழலுக்கு ஏற்ற ஓவல் ஆடுகளம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை ஒரு நம்பிக்கையான அணியாக மாற்றும் என்று சச்சின் கூறியுள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/sachin-tendulkar-on-oval-pitch-will-assist-spinners-good-venue-for-india-tamil-news-689613/



  • 15:57 (IST) 07 Jun 2023
    பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு?

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.31¼ கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணி ரூ.13¼ கோடியை பரிசாக அள்ளும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6½ கோடி கிடைக்கும்.

    அத்துடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.3¾ கோடியும், 4-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.2¾ கோடியும், 5-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.1½ கோடியும் வழங்கப்படும்



  • 15:54 (IST) 07 Jun 2023
    10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில்

    தொடக்க வீரர் டேவிட் வார்னர் - மார்னஸ் லாபுசாக்னே ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:26 (IST) 07 Jun 2023
    தொடக்க ஜோடியை உடைத்த சிராஜ்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கிய நிலையில், அந்த ஜோடியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் உடைத்தார்.

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:05 (IST) 07 Jun 2023
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இனிதே தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கியுள்ளனர்.



  • 15:03 (IST) 07 Jun 2023
    50 போட்டியில் கேப்டன் ரோகித்!

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 50வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் அவர் அதிரடி காட்டி மேலும் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.



  • 14:59 (IST) 07 Jun 2023
    இந்தியா பிளேயிங் லெவன்!

    ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.



  • 14:59 (IST) 07 Jun 2023
    டாஸ் வென்ற இந்திய பவுலிங்; ஆஸி,. முதலில் பேட்டிங்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதனால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யும்.



  • 14:57 (IST) 07 Jun 2023
    நேருக்கு நேர்!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 44-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 29 டெஸ்ட் டிரா மற்றும் ஒரு போட்டி சமனில் (டை) முடிந்தது.



  • 14:46 (IST) 07 Jun 2023
    ஓவல் பிட்ச் எப்படி?

    இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும். ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் குவிக்க முடியும். தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால், வெற்றிகரமாக செயல்பட முடியும்.

    இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த ஆட்டத்திற்கான ஆடுகளத்தில் வழக்கம் போல் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். முதல் 3 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.



  • 14:44 (IST) 07 Jun 2023
    ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்!

    டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்



  • 14:04 (IST) 07 Jun 2023
    இஷான் கிஷன் vs கே.எஸ் பரத்: ஆட்டத்தை மாற்றும் வீரர் வேண்டுமா? பெஸ்ட் கீப்பர் தேவையா?

    கே.எஸ் பாரத் அல்லது இஷான் கிஷான் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது குறித்த முடிவு இன்று எடுக்கப்படலாம். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    https://tamil.indianexpress.com/sports/ind-vs-aus-ks-bharat-or-ishan-kishan-in-india-playing-xi-decision-pending-for-wicketkeeper-role-tamil-news-688714/



  • 14:02 (IST) 07 Jun 2023
    ஆஸ்திரேலியா அணியின் உத்தேச லெவன் வீரர்கள்!

    உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.



  • 14:02 (IST) 07 Jun 2023
    இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்: இந்தியாவின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்!

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.



  • 14:01 (IST) 07 Jun 2023
    இந்தியா பிளேயிங் 11 எப்படி?

    இந்திய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த அசத்தல் வெற்றியின் உத்தேவகத்துடன் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் வலு சேர்க்கிறார்கள். இந்த வரிசையில் அனுப்பமுள்ள ரஹானே மீண்டும் இணைத்துள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

    விக்கெட் கீப்பர் வீரராக கே.எஸ்.பாரத் தான் களமாடுவார். ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா சுழலில் மற்றும் பேட்டிங்கில் வழக்கம் போல் அசத்துவார் என நம்பலாம். மற்றொரு சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் வருவார். வேகப்பந்துவீச்சு தாக்குதலை முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தொடுக்க காத்திருக்கிறார்கள்.



  • 13:43 (IST) 07 Jun 2023
    டாப் வரிசையில் - இந்தியா - ஆஸ்திரேலியா!

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.

    இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா மயிரிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.



  • 13:43 (IST) 07 Jun 2023
    இரு அணிகளின் பலம்; பலவீனம்; வெற்றி வாய்ப்பு? டாப் 3 லெஜன்ட்ஸ் என்ன சொல்றாங்க?

    இந்த ஆடுகளம் பொதுவாக இந்தியா போன்ற துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என பாகிஸ்தானின் புகழ்பெற்ற பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/australia-vs-india-three-cricket-legends-predict-wtc-final-winner-tamil-news-689192/



  • 13:19 (IST) 07 Jun 2023
    நியூசிலாந்து சாம்பியன்!

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அவ்வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.



  • 13:13 (IST) 07 Jun 2023
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!



    இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



Pat Cummins Cricket Rohit Sharma Sports London England India Vs Australia World Test Championship Indian Cricket Team Ind Vs Aus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment