IND vs BAN: India's Predicted Playing XI For ODIs in tamil: வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ஞாயிற்று கிழமை (டிசம்பர் 4 ஆம் தேதி) டாக்காவில் நடக்கிறது. இந்திய நேரப்படி இப்போட்டியானது பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்குகிறது.
The two Captains unveil the ODI series trophy on the eve of the 1st ODI at SBNCS, Mirpur.#BANvIND #TeamIndia pic.twitter.com/h08tPXn69b
— BCCI (@BCCI) December 3, 2022
இந்தியா vs வங்க தேசம்: இரு அணிகளில் யார் யாருக்கு ஓய்வு?
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்க தேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் விலகியுள்ளார் . பயிற்சியின்போது தமீம் இக்பால் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று வங்க தேச அணி தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜூல் அபேடின் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 100% உடற்தகுதியை அடையாத நிலையில் அவர் இந்த தொடர்களில் விளையாட மாட்டார். இதேபோல், யாஷ் தயாளும் ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார்.
இதையும் படியுங்கள்: Ind Vs Ban 1st odi: ஷமி-க்கு பதில் உம்ரான் மாலிக்… முழு வீரர்கள் பட்டியல் பாருங்க!
சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதேபோல், இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்ட வீரர்களும் இந்த தொடரில் களமாடுகிறார்கள்.
மேலும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப் புயல் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
🗣️🗣️"It's going be an exciting challenge against Bangladesh" - Captain, @ImRo45 speaks ahead of the 1st ODI in Dhaka #TeamIndia | #BANvIND pic.twitter.com/NtjCoHp4FT
— BCCI (@BCCI) December 3, 2022
இந்தியா vs வங்க தேசம்: தவான், ராகுல், ஸ்ரேயாஸ்… யாருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு?
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்க ஆவல் கொண்டுள்ளது. நியூசிலாந்தில் நடந்ததை மறந்துவிட்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரு புதிய பாதையை எடுக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. வீரர்களும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக உள்ளனர்.
இதையும் படியுங்கள்: Ind Vs Ban 1st odi: ஷமி-க்கு பதில் உம்ரான் மாலிக்… முழு வீரர்கள் பட்டியல் பாருங்க!
இந்திய அணியில் தொடக்க வீரருக்கான இடத்தில் யார் விளையாடுவது? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், கேப்டன் ரோகித் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவானுடன் ஓபன் செய்வார் என்று தெரிகிறது. எனவே, கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் பேட் செய்வார். எந்த சந்தேகமும் இல்லாமல், கோலி வழக்கம்போல் 3வது இடத்தில் களமாடுவார். அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வருவார்.
இந்த கலவையில் ராகுல் நம்பர் 5 இடத்திற்குத் தான் பொருந்துகிறார். 6, 7, 8, மற்றும் 9 இடங்களில் ஆல்-ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா vs வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ்.
இதையும் படியுங்கள்: IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.