/tamil-ie/media/media_files/uploads/2019/11/a8-2.jpg)
ind vs ban 2nd test day 1 live score rohit, saha catch video - ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ரோஹித், சஹா கேட்ச் - வீடியோவை பார்த்தாலே விசிலடிக்கத் தோணுதே!!
'தீயா வேலை செய்யுறாங்கப்பா' நம்ம டீமு பிளேயர்ஸுங்க.... என்னா வேகம், என்னா பவுலிங், என்னா ஃபீல்டிங், என்னா விக்கெட் கீப்பிங்.... இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தில் ஹெல்மெட்டில் சரமாரியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக ஷமி ஓவரில் லிட்டன் தாஸ் மற்றும் நயீத் ஹசன் ஹெல்மெட்டில் பந்து தாக்க, இருவரும் நிலை குலைந்து போனார்கள்.
இந்தியா vs வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி லைவ் ஸ்கோர் காண இங்கே க்ளிக் செய்யவும்
இந்நிலையில், வங்கதேச கேப்டன் மொமினுல் ஹக், உமேஷ் யாதவ் ஓவரில், எட்ஜ் ஆகி 0 ரன்களில் வெளியேறினார். அந்த கேட்சை ஸ்லிப்பில் பிடித்தது ரோஹித் ஷர்மா. ஆனால், இந்த கேட்ச் தான் இன்றைய 'டாக் ஆஃப் தி டே' என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது.
கேப்டன் கோலிக்கு வந்த அந்த கேட்ச், கொஞ்சம் முன்னதாகவே லேண்டிங் ஆகச் சென்றது. ஆனால், சற்றும் தாமதிக்காத ரோஹித், இடது பக்கம் பாய்ந்து ஒற்றைக் கையால் அதை கேட்ச்சாக்க, கோலி கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
22, 2019Spectacular catch by @ImRo45pic.twitter.com/I0ueMA5EFn
— AJITH (@ajithabaydev)
Spectacular catch by @ImRo45pic.twitter.com/I0ueMA5EFn
— AJITH (@ajithabaydev) November 22, 2019
அதேபோல், இஷாந்த் ஓவரில் மஹ்மதுல்லா 6 ரன்களில் எட்ஜ் ஆக, அதை விக்கெட் கீப்பர் சஹா டைவ் அடித்து ஒற்றைக்கையால் பிடிக்க, அந்த கேட்சும் மெர்சல் ரகமானது.
Wriddhiman #saha Catch. ✌️????#PinkBall#pinkballtestmatch#INDvBANpic.twitter.com/7kbfkNfUoO
— Mangesh Bhosale (@mangubhosale) November 22, 2019
இதே மாதிரி வெளிநாடு செல்லும் போதும், பெர்ஃபாமன்ஸ் பண்ணுன்ன கொண்டாடலாம்!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.