Ind vs ban ODIs: Umran Malik replace Mohammed Shami Tamil News: வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்டில் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்க தேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டாக்காவில் நடக்கிறது.
சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதேபோல், இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்ட வீரர்களும் இந்த தொடரில் களமாடுகிறார்கள்.
இதையும் படியுங்கள்: IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
ஷமி-க்கு பதில் உம்ரான் மாலிக் சேர்ப்பு
இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வேகப் புயல் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ அதன் அறிக்கையில், “வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) உள்ள பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் இருப்பதால், அவரால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது.
இதையும் படியுங்கள்: IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக்கை நியமித்துள்ளது,” என்று தெரிவித்துள்ளது.
🚨 NEWS 🚨: Umran Malik to replace Mohd. Shami in India’s ODI squad for Bangladesh series. #TeamIndia | #BANvIND
— BCCI (@BCCI) December 3, 2022
Details 🔽https://t.co/PsDfHmkiJs
இருப்பினும், பிசிசிஐ, ஷமியின் காயத்தின் அளவு குறித்து இன்னும் ஆராயவில்லை. அவர் நியூசிலாந்திற்கான டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட பின்னர் வங்கதேச சுற்றுப்பயணத்தில் மீண்டும் வரவிருந்தார். ஆனால், அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் இடம் பிடிப்பது சந்தேகம் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரிவின் தலைவராக ஷமி இருக்க வேண்டும்.

ஷமி சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால், டெஸ்ட் அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரைக் குறிப்பிட வேண்டியிருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இந்தியா இந்த இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதால், இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil