U19 கிரிக்கெட்: முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது பங்ளாதேஷ்
ind vs ban u19 world cup final updates: U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை பங்ளாதேஷ் அணி வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
By: WebDesk
Updated: February 9, 2020, 10:28:08 PM
ind vs ban u19 world cup final, bangladesh won
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை பங்ளாதேஷ் அணி வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17ம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
U19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 5வது முறையாக U19 உலகக் கோப்பையை பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும் முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் பங்ளாதேஷ் அணியும் விளையாடியது.
இத்தொடரில் தோல்வியே அடையாத இந்தியா, அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஸ்மாஷ் செய்தது.மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வலம் வரும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 312 ரன்), திவ்யான்ஷ் சக்சேனா (2 அரைசதத்துடன் 148 ரன்), கேப்டன் பிரியம் கார்க் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது.
WATCH: #TeamIndia extends best wishes to the U19 team for the #U19CWC final. ????????
Let’s get behind our boys as they are just one step away from winning the title. Send in your wishes. ???????????????? – by @RajalArora
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் (13 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி (11 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் முன்னணியில் உள்ளனர். ஓவருக்கு சராசரியாக 4-க்கும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து சிக்கனம் காட்டுவது மிகப்பெரிய பிளஸ்.
அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணியும், சர்பிராஸ் ஃபேக்டர் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் இத்தொடரில் எந்த போட்டியிலும் தோற்கவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் விளங்குகிறது.
உலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாக அமையும் என்று கருதப்பட்டது.
இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, பங்ளாதேஷ் அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். இதனால், இந்திய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது.
இதனால், சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது. மழை விட்ட பிறகு மீண்டும் போட்டி தொடங்கியபோது, நடுவர்கள் டக்வொர்த் லெவிஸ் முறையில் வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, 24 பந்துகளில் பங்ளாதேஷ் அணி 1 ரன் மட்டுமே எடுக்க வேண்டும். அதனால், பங்ளாதேஷ் அணி 42.2 ஓவரில் எளிதாக 1 ரன் எடுத்து 170 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையை வென்றது.
முதல்முறையாக U19 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பங்ளாதேஷ் வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“