India vs New Zealand {IND VS NZ} 1st ODI Match 2022 Live Streaming | இந்தியா vs நியூசிலாந்து {IND VS NZ} முதல் சர்வதேச ஒருநாள்போட்டி 2022 நேரடி ஒளிபரப்பு: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய டி20 அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் தொடக்க ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3வது போட்டி டிஎல்எஸ் முறையில் டை ஆனது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. 3 போட்டிகளின் முழு அட்டவணையை இங்கு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Qatar World Cup: ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜப்பான் ரசிகர்கள் செயல்!
இந்தியா vs நியூசிலாந்து: ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை
தேதி – போட்டி விவரங்கள் – இடம் – நேரம் (IST)
நவம்பர் 25, 2022 – இந்தியா vs நியூசிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி – ஈடன் பார்க், ஆக்லாந்து – காலை 7:00 (இந்திய நேரப்படி)
நவம்பர் 27, 2022 இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி – செடான் பார்க், ஹாமில்டன் – காலை 7:00 (இந்திய நேரப்படி)
நவம்பர் 30, 2022 இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச் -காலை 7:00 (இந்திய நேரப்படி)
Smiles, friendly banter & the trophy 🏆 unveil! #TeamIndia | #NZvIND pic.twitter.com/3R2zh0znZ3
— BCCI (@BCCI) November 24, 2022
இதையும் படியுங்கள்: சமூக வலைதளத்தில் நம்பர் ஒன்… அசத்தும் டென்னிஸ் வீராங்கனை… டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்!
இந்தியா vs நியூசிலாந்து: இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் இந்த தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். கேப்டன் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழிநடத்துக்கிறார். அந்த அணி அனைத்து முக்கிய வீரர்களையும் கொண்டுள்ளது.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், சக்ஷர்தீப் சிங், தீபா, சஹர்தீப் சிங், தீபா, உம்ரான் மாலிக்
— BCCI (@BCCI) November 23, 2022
நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் சவுத் மில்னே, டிம் மில்னே.
இதையும் படியுங்கள்: FIFA World Cup: ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோ… இத்தனை தண்டனைகளா?
இந்தியா vs நியூசிலாந்து: இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு மற்றும் நேரலை ஸ்ட்ரீமிங் விவரங்கள்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் நவம்பர் 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த மூன்று ஆட்டங்களும் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு, அங்கு உள்ளூர் நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும்.
இந்தியாவில்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகளையும், இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒளிபரப்பு செய்கிறது. எனவே, இந்தத் தொடர் பிரைம் வீடியோ தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தொடருக்கு வேறு எந்த தனியார் தொலைக்காட்சியும் உரிமம் பெறவில்லை. இருப்பினும், டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்பக்கூடும்.
இதையும் படியுங்கள்: IND vs NZ: தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு… சஞ்சு பற்றி தவான் சொன்னது என்ன?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil