Advertisment

ஜெயிச்சா கொண்டாடுவது; தோற்றால் கலாய்ப்பது! - ஆதங்க கோலியின் பிரஸ் மீட் ரியாக்ஷன்

இந்த போட்டியின் ஒரே நல்ல விஷயம், ஐந்தாவது நாள் அதிகாலை 5 மணிக்கு நாம் யாரும் எழுந்திருக்க தேவையில்லை என்பதே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs nz 1st test virat kohli press meet

ind vs nz 1st test virat kohli press meet

'ஒரு டி20 சீரிஸ் ஜெயிச்சது குத்தமாய்யா' என்ற நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது உள்ளது.

Advertisment

வெலிங்டனில் இந்தியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறது வில்லியம்சன் டீம்.

உள்நாட்டில் டெஸ்ட்டில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த கோலி & கோ-வுக்கு இது பெரிய அடி தான். அதுவும், இஷாந்த், ஷமி, பும்ரா, அஷ்வின் போன்ற இந்தியாவின் உச்சக்கட்ட டெஸ்ட் பவுலிங் பலத்தை கொண்டும், இளமையும், அனுபவமும் கலந்த வலிமையான பேட்டிங் ஆர்டர் கொண்டு களமிறங்கிய இந்தியாவுக்கு இந்த அடி அதிர்ச்சி தான்!

இந்தியா தோற்றது எப்படி? - முழு விவரம் அறிய

அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தனது முதல் தோல்வியை பதிவு செய்திருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348-ஐ பதிவு செய்தது. ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 191க்கு ஆல் அவுட்டாக, 9 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது நியூஸி.,

போட்டி முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, "இந்த டெஸ்டில் நாங்கள் ‘டாஸில்’ தோற்றோம். ஆனால் அதே நேரத்தில் நாங்கள் சவால் கொடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு ஆடவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. 220-230 ரன்களை எடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது.

பந்து வீச்சில் நாங்கள் சவால் விடும் வகையில் திகழ்ந்தோம். நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்தது வரை நாங்கள் நன்றாகவே உணர்ந்தோம். முன்னிலையை 100 ரன்களாக கொண்டுவர நினைத்தோம். ஆனால் கடைசி 3 வீரர்கள் பேட்டிங் எங்களை போட்டியில் இருந்து வெளியேற்றி விட்டது. பவுலர்களும் தங்கள் பந்து வீச்சில் மகிழ்ச்சி அடைந்து இருக்க மாட்டார்கள்.

பிரித்விஷா போன்றவர்களை குறை சொல்ல வேண்டாம். 2 வெளிநாட்டு டெஸ்டுகளில் தான் ஆடியுள்ளார். ரன்களை எடுப்பது எப்படி என்று அவர் மேம்பட்டு வருகிறார். பேட்டிங்கில் மாயங் அகர்வால். ரஹானேவை தவிர மற்றவர்கள் சரியாக ஆடவில்லை.

இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தோல்வியால் உலகமே முடிந்து போய் விடவில்லை. நாங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று இருக்கிறோம்.

கியர் மாற்றுவதில் வில்லியம்சனிடம் கோலி பாடம் படிக்கணும்! - இது தான் மாஸ்டர் பீஸ் ஆட்டம்

வெளிநாடுகளில் விளையாடும் போது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ரன்கள் குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை" என்றார்.

கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணியின் தோல்வியை விமர்சிக்க, ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கலாய்ப்பு ரீதியில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். (ஜெயிச்சா கொண்டாட வேண்டியது; தோற்றால் கிண்டல் பண்ண வேண்டியது)

இந்த போட்டியின் ஒரே நல்ல விஷயம், ஐந்தாவது நாள் அதிகாலை 5 மணிக்கு நாம் யாரும் எழுந்திருக்க தேவையில்லை என்பதே என்று ரசிகை ஒருவர் கலாய்த்துள்ளார்.

9 ரன்னு டார்கெட் வச்சிட்டு என்ன டிஸ்ஸுக்ஷன் வேண்டியிருக்கு!! அவங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரில!!?

India Vs New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment