IND vs NZ ODI Full Scorecard: 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முழுமையாகத் தோற்ற நியூசிலாந்து, அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்து இரு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.8) ஆக்லாந்தில் தொடங்கியது.
நியூசிலாந்து எதிரான டி20 தொடரை, 5-0 என்று ஒயிட் வாஷ் செய்த பிறகு, கடந்த 5ம் தேதி ஹாமில்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், மாஸாக களமிறங்கியது இந்திய அணி. எதிர்பார்த்தது போலவே சிறப்பாக ஆடிய கோலி டீம், 347 ரன்கள் குவிக்க, 'இவிங்க அடங்கவே மாட்டங்க போல' மீம்ஸ்கள் பறந்தன.
இந்தியா U19 vs வங்கதேசம் U19 இறுதிப் போட்டி 2020 - போட்டி நேரம், வானிலை, வீரர்கள் விவரம் இங்கே
ஆனால், எல்லாவற்றுக்கும் மொக்கையாக நியூசிலாந்து, 48.1வது ஓவரிலேயே இலக்கை சேஸ் செய்து இந்தியாவுக்கு கொடூர ரிப்ளை கொடுத்தது. இந்தியாவை நியூஸி., ட்ரீட்மென்ட் செய்த விதம், 'ச்சை' என்கிற அளவுக்கு சென்றுவிட்டது. இவ்ளோ பெரிய டார்கெட்டையும் இவ்ளோ கேஷுவலா சேஸ் செய்தா எப்படி! என்று கேட்க வைத்துவிட்டார்கள்.
இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. பவுலிங்கில் ஷர்துள் தாக்குரால் மறந்தும் ஒரு பெர்சன்ட் தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால், அவருக்கு பதில் சைனி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது.
நியூசிலாந்து, முதன் முதலாக இந்த சீரிஸில் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அது ஹைவேஸாக இருக்குமா அல்லது முட்டுசந்தாக முடியுமா என்பது போக போக தெரியும்.
3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இன்று இந்தியா தோற்றுவிட்டால், தொடரை இழந்துவிடும்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.
Live Blog
New Zealand vs India, 2nd ODI Eden Park, Auckland : இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி லைவ்
48.3 ஓவர்களில் இந்தியா 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிந்திர ஜடேஜா 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. ஏற்கனவே முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முழுமையாகத் தோற்ற நியூசிலாந்து, அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்து இரு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தடுமாறிய இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து ஷைனி நம்பிக்கை அளித்தார். பவுலரான ஷைனி தேர்ந்த பேட்ஸ்மேன் போல ஆடி, 49 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அவர் அவுட் ஆனபோது இந்திய அணி 44.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது.
பின்னர் சாஹல் உள்ளே வந்தார். 47 ஓவர்கள் முடிவில் இந்தியா 246 ரன்கள் சேர்த்தது. வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டன. ஒரே நம்பிக்கை ஜடேஜா.
29 ஓவர்களில் 136 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் களத்தில் நிற்கிறார்கள். ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியை இழந்த இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-வது போட்டியிலும் தடுமாற்றமான நிலையில் இருக்கிறது.
5 ஓவர்களில் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இரு தொடக்க ஆட்டக்காரர்களும் வீழ்ந்தனர். மயங்க அகர்வால் 3 ரன்களுக்கு பென்னட் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து பிரித்வி ஷா 24 ரன்களில் (19 பந்து, 6 பவுண்டரி) ஜேமியசன் பந்தில் க்ளீன் போல்டு ஆனார். ஜேமியசனுக்கு ஒருநாள் போட்டியில் இது முதல் விக்கெட்.
நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்ததையடுத்து, 274 என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. முதலாவதாக ப்ரித்வி ஷாவும், மாயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். இதில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த அகர்வால் பென்னெட்டின் பவுலிங்கில், டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் 24 ரன்களில் ப்ரித்வி ஷாவும் அவுட் ஆனார். அதன் படி 4-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி
இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி
50 ஓவர்களில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் இறுதி வரை அவுட் ஆகாமல் 73 ரன்கள் சேர்த்தார். 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கைல் ஜேம்சன் 25 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் நியூசிலாந்து சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவி செய்தார்.
பின்னர் பேட் செய்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 3 ரன்களில் பென்னட் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் ஆனார்.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஹென்றி நிக்கோலஸ் 41 ரன்களில் வீழ்ந்தாலும், அனுபவ வீரர் மார்டின் குப்தில் நங்கூரம் பாய்ச்சி நின்று இந்திய பவுலர்களை திணறடித்தார். 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என வலுவாக இருந்த நியூசிலாந்து, அதன்பிறகு மளமளவென சரிந்தது. டாம் ப்ளண்டல் 22 ரன்களில் ஷர்துல் தாகூர் பந்தில் ஷைனியிடம் கேட்ச் ஆனார். குப்தில் 79 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.நியூசிலாந்து 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் 29 ரன்களுடனும், டிம் சவுதி 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சாஹல் 3, ஷர்துல் 2, ஜடேஜா 1 விக்கெட் என சாய்த்தனர். டிம் சவுதி 3 ரன்களில் சாஹல் பந்தில் ஷைனியிடம் கேட்ச் ஆகிவிட, நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுத்தும், அதை தடுக்க முடியாமல், தோல்வி அடைந்தது. ஆகையால் இரு அணிகளுக்குமே இன்றையப் போட்டி முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights