IND vs NZ 2nd ODI Match 2023 Live Updates | IND vs NZ இரண்டாம்ஒருநாள்போட்டி 2023 நேரடி அறிவிப்புகள்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
New Zealand in India, 3 ODI Series, 2023Shaheed Veer Narayan Singh International Stadium, Raipur 09 February 2023
India 111/2 (20.1)
New Zealand 108 (34.3)
Match Ended ( Day – 2nd ODI ) India beat New Zealand by 8 wickets
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு; நியூஸிலாந்து பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு ஃபின் ஆலன் – டெவோன் கான்வே ஜோடி தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியில் முதல் ஓவரை சந்தித்த ஃபின் ஆலன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு வந்த, ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்னிலும், டேரில் மிட்செல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகார்: விசாரிக்க 7 பேர் கமிட்டி அமைப்பு
ஒரு பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் டெவோன் கான்வே 7 ரன்னிலும், டாம் லாதம் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால், வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறி வந்தது. ஷமி மாறி மாறி விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டி வந்தார். குறிப்பாக, ஷமி வீசிய பந்தை டேரில் மிட்செல் ஷமிக்கு நேராக அடிக்க அதை லாவகமாக பாய்ந்து பிடித்தார் ஷமி. இதேபோல், டெவோன் கான்வே அடித்த பந்தை பந்துவீசிய ஹர்திக் பாண்டியா அசத்தலான டைவ் அடித்து பிடித்தார்.
இதையும் படியுங்கள்: உலகின் அபாயகரமான நெ. 7 பேட்ஸ்மேன்: யார் இந்த பிரேஸ்வெல்?
இப்படி ஆட்டம் பரபரப்பாக சென்ற நிலையில், அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் விக்கெட் சரிவை சிறிது நேரம் மீட்டெடுத்தார். எனினும், 4 பவுண்டரிகளை ஓட விட்டு அதிரடி காட்டி முயன்ற மைக்கேல் பிரேஸ்வெல் 22 ரன்னில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த 10 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்து இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு இருந்த மிட்செல் சான்ட்னர் 27 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 36 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.
இதையும் படியுங்கள்: பளார் அறை விட்ட காதலி… பொது இடத்தில் மைக்கேல் கிளார்க் அவமானம்; பொழைப்பும் போச்சு!
இறுதியில், ஒரு சிக்ஸரைக் கூட பறக்கவிடாத நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களிலே அனைத்தும் விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 108 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவுக்கு 109 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டி எடுத்த முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் தலா 2 விக்கெட்டையும், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Innings Break!
— BCCI (@BCCI) January 21, 2023
A brilliant bowling performance from #TeamIndia 👏 👏
3⃣ wickets for @MdShami11
2⃣ wickets each for @hardikpandya7 & @Sundarwashi5
1⃣ wicket each for @mdsirajofficial, @imkuldeep18 & @imShard
Scorecard ▶️ https://t.co/tdhWDoSwrZ #INDvNZ | @mastercardindia pic.twitter.com/0NHFrDbIQT
109 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தபோது அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 50 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி, 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் இறுதிவரை களத்தில் இருந்து வெற்றியை தேடி கொடுத்தார். 20.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்மான் கில், 40 ரன்களுடனும், இஷான் கிஷன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 24-ந் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.
இரு அணியின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
நியூசிலாந்து:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil