மீண்டும் ஒரு சறுக்கலான, முறுக்கு பின்னல்கள் சொதப்பலோடு 'நறுக்' இன்னிங்ஸ் ஒன்றை ஆடி சரண்டராயிருக்கிறது இந்திய அணி.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். பசுமை போர்வை போர்த்திய மைதானத்தில் ப்ரித்வி ஷா, மாயங்க அகர்வால் களமிறங்கினர்.
"பஹுத் தம் ஹை" - எதிரணியின் நிம்மதியை குலைக்கும் ஷஃபாலி வெர்மா பற்றி ஷேவாக்
மாயங்க் 7 ரன்களில், போல்ட் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாலும், ப்ரித்வி சில ஏவுகணைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.
64 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து ஜேமிசன் ஓவரில் கேட்ச்சானார். ஜேமியின் ஒரு வைட் பந்தில் தேவையில்லாத ஷாட் விளையாட போய் அவுட்டானார்.
ஒன் டவுன் இறங்கிய புஜாரா நிலைத்து ஆட, இந்தியா 'பரவாலப்பா' மோடில் ஆடிக் கொண்டிருந்தது. இன்றைய முதல் செஷன் இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது.
களத்தில் அரைமணி நேரம் செலவிட்ட ரஹானே, ஆப் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை அனாவசியமாக ஆட முயன்று முக்காடு போடாத குறையாக வெளியேறினார். அவர் அடித்த ரன்கள் 7.
ஹனுமா விஹாரி தொடக்கத்திலேயே கொடுத்த கேட்சை நியூஸி., தவறவிட்ட நிலையில், அவர் புஜாராவுடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று 'கூல் ப்ரோ' மனநிலை கொடுத்தார்.
சூழல்கள் நன்றாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் நீல் வேக்னர் வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து, 55 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார்.
பெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் - வைரல் வீடியோ
140 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ஜேமிசன் ஓவரில் ஹூக் ஷாட் விளையாடிய போது, டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார்.
கேப்டன் கோலி இப்போது 'நான் யாரு' மோடில் இருப்பது தெளிவாக தெரிகிறது. சவுதி ஓவரில் 3 ரன்களில் சப்தம் போடாமல் வெளியேறினார்.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் சில 'தேவையில்லாத ஆணி' ஷாட்களால் ஆல் அவுட் ஆகியது என்பதே நிதர்சனம்.