IND vs NZ 3rd ODI Match 2023 Live Updates | IND vs NZ மூன்றாம் ஒருநாள் போட்டி 2023 நேரடி அறிவிப்புகள்: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படியுங்கள்: இந்த ஆண்டு உலகக் கோப்பை: இந்தியாவின் பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதானா?
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு; இந்தியா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால், இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் - கில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதேபோல், தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதையும் படியுங்கள்: ஆஸி,. டெஸ்ட்டில் சூரியகுமார் தேர்வு: மவுனம் உடைத்த சர்பராஸ் கான்
இந்த ஜோடி தங்களின் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை கலங்கடித்தனர். இதனால் இவர்களுக்கு பந்துவீசவே குழம்பினர். மேலும், அதிரடியாக விளையாடி ரன்மழை பொழிந்து வந்த இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் 83 பந்துகளில் சதம் விளாசினார். அவருடன் மறுமுனையில் இருந்த கில் 72 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியில் மிரட்ட நினைத்த கேப்டன் ரோகித் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் போல்ட் அவுட் ஆனார். மொத்தமாக 85 பந்துகளை எதிர்கொண்டு இருந்த ரோகித் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பிறகு கோலியுடன் இணைந்த கில் 78 பந்துகளில் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என அடித்து நொறுக்கி 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இஷான் கிஷன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி 17 ரன்னிலும், மறுமுனையில் 36 ரன்கள் எடுத்த கோலியும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதேபோல் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்பிறகு களத்தில் இருந்து விக்கெட் சரிவை சிறிது நேரம் மீட்ட ஹர்திக் பாண்டியா - ஷர்துல் தாக்கூர் ஜோடியில் தாக்கூர் 25 ரன்னிலும், அடுத்தடுத்து சிக்ஸர்களையும், பெரிய ஷாட்களையும் ஆடி மிரட்டி அரைசதம் அடித்த பாண்டியா 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. இதனால், நியூசிலாந்துக்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி தரப்பில், பிளேயர் டிக்னர் மற்றும் ஜேக்கப் டஃபி தலா 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 386 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர் பாபியன் ஆலன் தான் சந்தித்த 2-வது பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா அவரது விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய ஹன்ரி நிக்கோலஸ் மற்றொரு தொடக்க வீரரான டெவான் காண்வேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், நிகோலஸ் 40 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த மிட்செல் கான்வே உடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே, சிறப்பாக விளையாடி வரும் கான்வே அரை சதம் அடித்தார். மிட்செல் அவருக்கு ஆதரவாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியாக விளையாடிய கான்வே சிக்சர்களைப் பறக்க விட்டு 72 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து சதம் அடித்தார்.
கான்வேவுக்கு கம்பெனி கொடுத்து வந்த மிட்செல் 24 ரன்களில் தாக்கூர் பந்தில் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த லேதம் தாக்கூர் பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
இவரை அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்கூர் பந்தில் விராட் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார்.
அடுத்ததாக பிரெஸ்வெல் வந்து கான்வே உடன் இணைந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கான்வே சிக்சர், ஃபோர் என விளாசி அதிரடியைத் தொடர்ந்தார். கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் எடுத்திருந்தபோது, உம்ரான் மாலிக் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உம்ரான் மாலிக் மிகப் பெரிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக முந்தைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ப்ரெஸ்வெல் இந்த ஆட்டத்திலும் சோபிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 37வது ஓவரை குல்தீப் யாதவ் வீசியபோது இறங்கி அடிக்க முயன்ற ப்ரெஸ்வெல் பந்தை தவறவிட்டதால் கீப்பர் இஷான் கிஷண் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். ப்ரெஸ்வெல் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இவைரை அடுத்து வந்த ஃபெர்குசன் 7 ரன்கள் எடுத்திருந்தபோது குல்திப் யாதவ் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜேக்கப் டஃபி 2 ரன்கள் எடுத்திருந்தபோது, சாஹல் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக சாண்ட்னர் 34 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய பந்தை விராட் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து உடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்: ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா கேப்டனாக ஜடேஜா… தமிழ்நாட்டுடன் இன்று மோதல்!
இரு அணி லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.
🚨 Team Update 🚨
Two changes in the side as Umran Malik & Yuzvendra Chahal are named in the eleven.
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/ifXMk5NO4H— BCCI (@BCCI) January 24, 2023
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ரோகித் சர்மா, இஷான் கிஷான், சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரீகர் பாரத், ரஜத் படிதார், ஷாபாஸ் படிதார், அஹ்மத், உம்ரான் மாலிக்,
நியூசிலாந்து அணி
டாம் லாதம், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், ப்ளேர் சாப்திகோ, ஜாப்திகோ, ஜாப்தி டஃபி, டக் பிரேஸ்வெல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.