IND vs NZ 3rd T20 Score Updates: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில்(ஜன.29) இன்று நடைபெற்றது. இதில், சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
Web Title:Ind vs nz 3rd t20 live cricket score
நியூசிலாந்து மண்ணில் முதன் முதலாக டி20 தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அட....டே!!! கடைசி பந்திலும் ரோஹித் சிக்ஸ் விளாசி அணியை வெற்றிப் பெற வச்சு அசத்திட்டாப்ள....
ரோஹித் - 6
ரோஹித் - 6
ராகுல் - 1
ராகுல் - 4
ரோஹித் - 1
ரோஹித் - 2
இந்திய அணியில் ரோஹித் - ராகுல் களமிறங்கியுள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் பந்து வீசுபவர் டிம் சவுதி.
இந்தியாவுக்கு 18 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
கப்தில் - 4
வில்லியம்சன் - 1 ரன்
வில்லியம்சன் - 4
வில்லியம்சன் - 6
பேட்டிங் செய்வது வில்லியம்சன், கப்தில்
0.2 - 1 ரன்
சூப்பர் ஓவர் வீசுவது பும்ரா....
0.1 - 1 ரன்
பரபரப்பான ஆட்டத்தில், நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
ஷமி வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நியூசிலாந்து 8 ரன்கள் மட்டும் எடுத்ததால், ஆட்டம் டிராவானது.
கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது, டெய்லர் போல்டானார்.
நியூசிலாந்து தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் - காலின் மன்ரோ களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 65 ரன்களும், கோலி 38 ரன்களும் எடுத்தனர். முதல் பத்து ஓவர்களுக்கு இந்தியா 92-1.
எப்படியும் 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்தியாற்கு 30 - 35 ரன்கள் குறைந்துவிட்டது.
ரோஹித் அரைசதத்துக்கு பிறகு இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
லோகேஷ் ராகுல் 19 ரன்னிலும், ரோஹித் 65 ரன்னிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும் வெளியேறினார்கள். இதில், பென்னெட் வீசிய ஒரே ஓவரில் ரோஹித், துபே கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.
நாம் எதிர்பார்த்தது போன்றே அண்ணன் ரோஹித் அபார அரைசதம் அடித்துவிட்டார்.
அதுவும் 23 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசி இருக்கிறார்.
ரோஹித் - ராகுல் தொடக்க கூட்டணி களமிறங்கியது....
அண்ணன் ரோஹித், கடந்த இரு போட்டியிலும் வந்தவுடன் பெவிலியன் திரும்பினார் என்பதால் இன்றாவது அடிக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்...!
ஹாமில்டனில் நடைபெறும் இந்த போட்டி நியூசிலாந்துக்கு மானப் பிரச்சனையாகும். இதுவரை நியூசிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்றதேயில்லை. ஒருவேளை இந்தியா வென்றுவிட்டால், கோலியின் 'அடிச்சு நொறுக்கு' கிரீடத்தில் ஒரு முக்கிய வைரம் அங்கம் பெறும்.
ஜெயிக்குற லெவனை நாம எப்போங்க மாத்தியிருக்கோம்...?
அதே லெவன் தான்....
ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல்(w), விராட் கோலி(c), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துள் தாகூர், முகமது ஷமி, யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா
வழக்கம் போல அண்ணாத்த வில்லியம்சன் டாஸ் ஜெயிச்சுட்டாப்ள....
'யோவ்... மேட்சையே நாங்க தான் ஜெயிச்சிட்டு இருக்கோம்... போவியா!!!
ஆனா, பாருங்க... ஹாமில்டனின் Green விக்கெட்டுல அண்ணாத்த உஷாரா பவுலிங் எடுத்துட்டாப்ள!!