ரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ
Rohit Super Over Six: அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ ஒத்திக்கோ… என்று தன் ரசிகர்களை குஜாலாக்கிவிட்டுள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் இன்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றியிருக்கிறது. சூப்பர் ஓவரில்…
Rohit Super Over Six: அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ ஒத்திக்கோ… என்று தன் ரசிகர்களை குஜாலாக்கிவிட்டுள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.
நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் இன்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றியிருக்கிறது.
இந்தியா நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 179-6 என்று நியூசிலாந்து ‘டை’ அடிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
நம்ம பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்ட பிறகு, இந்திய அணியில் ரோஹித் – ராகுல் ஜோடி களமிறங்கியது.
சவுதி பந்து வீச, முதல் பந்தை எதிர்கொண்ட ரோஹித் 2 ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ராகுல், நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார்.
2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. களத்தில் நிற்பது ரோஹித்.
அப்புறம் என்ன…. ஆங்…ஆங்… கெளம்பு கெளம்பு….
5வது பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு அனுப்பிய ரோஹித், கடைசி பந்தை லாங் ஆஃபிற்கு பறக்க விட, இந்தியா மிரட்டலாக வெற்றிப் பெற்றது.
ரோஹித் அடித்த கடைசி இரண்டு சிக்ஸ் வீடியோ இப்போது காட்டுத் தீயாய் வைரலாகி வருகிறது.