Advertisment

4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்ஸ்… பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 11 இதுதானா?

BCCI's Team Picture Clearly Hints At India's Playing XI For Pakistan Tamil News: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் ஆடும் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டீம் இந்தியா 4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கலாம் என்று தெரிகிறது.

author-image
WebDesk
New Update
IND vs PAK: India’s Playing XI For Pakistan revealed

IND vs PAK: Team India Playing XI Tamil News

IND vs PAK Tamil News: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆறு அணிகளும் தற்போது இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதையும் படியுங்கள்: இந்த ஓவர்களில் அதிரடி அவசியம்… ஆசியக் கோப்பையில் இந்தியா வியூகம் இதுதான்!

4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் களமாடும் இந்தியா…

publive-image

இந்நிலையில், கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக வலம் வரும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 2வது லீக் ஆட்டம் நாளை 28 ஆம் தேதி தூபாயில் அரங்கேறுகிறது. இருநாடுகளின் அரசியல் காரணங்களால் இரண்டு அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகின்றன. இதனால், இப்போட்டிக்கு இருநாட்டு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Ind vs Pak: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?

இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், கடந்த புதன் கிழமை முதல் தூபாயில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்த, அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ்.லக்ஷ்மான் பொறுப்பேற்றுள்ளார். இவர்களது வழிகாட்டுதலின்படி, இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் ஆடும் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டீம் இந்தியா 4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கலாம் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பில், 11 இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்: IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

அதில், முதல் படத்தில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்க தயாராக பயிற்சி செய்வது போலும், விராட் கோலி 3-வது இடத்தில் களமாட பயிற்சி மேற்கொள்வதைப்போலும் உள்ளன. இதேபோல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் படங்கள் கோலியின் புகைப்படத்திற்கு அடுத்தாற்போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றன.

இந்த வரிசையில், இந்திய அணியில் தரமான கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்-கின் படமும் இடம்பித்துள்ளது. எனவே அவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. பந்துவீச்சாளர்களில் அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் புகைப்படம் இருக்கிறது. எனவே, ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் 4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் இந்தியா களமிறங்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்: களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Dubai Sports Indian Cricket India Vs Pakistan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment