உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்துடனான ஆட்டத்தில் மழை தான் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியினை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னை வெதர்மேன் நம்முடைய எதிர்பார்ப்பின் மீது மழையை அள்ளி கொட்டிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
தற்போது ஓல்ட் ட்ரஃபோர்டில் இருக்கும் காலநிலை
இன்று மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார். அதில், எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் மேட்சின் போது மழை மற்றும் வானிலையை அப்டேட் செய்வது வழக்கம். இன்று மழைப் பொழிவின் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட இருக்கும் மேட்ச்சின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், நம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே. ஞாயத்துக் கெழம ஆச்சுனாலே குளிக்காம கூட மேட்ச் பாக்க உக்காந்திருவாங்க... சோஃபால உக்காந்துட்டு ஒரு இன்ச் கூட நகராம மேட்ச் பாக்குற சுகமே தனிதான். ஆனால் இன்று மழை பெய்தால் நாளைக்கான தண்ணீர் தட்டுப்பாடு குறையும். இது மாதிரி சில மேட்ச்சுங்கள வறட்சியான காலத்துல இந்தியால சில நேரம் நடத்தினா தண்ணீர் பிரச்சனைல இருந்து நாம தப்பிச்சுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்னதான் நகை மொழியில் அவரின் அப்டேட் இருந்தாலும், நம்ம மக்களின் மனம் ஏன் இப்படி ஆனது வருத்தம் அவருக்கு இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
மேலும் படிக்க :India vs Pakistan World Cup 2019 Match Date, Players List, Weather Forecast, Live Streaming Details: இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்தை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?