டிக்டாக், ஷேர்இட், யுசி பிரவுசர், லைக், விசேட் மற்றும் பைகோ லைவ் உள்ளிட்ட 59 சீன நாட்டைச் சேர்ந்த செயலிகளை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. அவை “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவை என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்?
இந்த லாக் டவுன் காலத்தில், பிரபலங்கள் ஒவ்வொரு மாதிரியாக தங்களை பிஸியாக வைத்திருக்க, ஆஸி., வீரர் டேவிட் வார்னர் டிக் டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். தன் மனைவி, இரு மகள்கள் என எப்போதும் குடும்பத்துடன் ஜெகஜோதியாக வந்து டிக்டாக்கில் குத்தாட்டம் போட்டுச் செல்வது வழக்கம்.
இந்திய ரசிகர்கள் மத்தியில், வார்னரின் சேட்டை வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்களின் பாடல்கள் என்று வெரைட்டிக்காட்டி ஹிட்டடித்தன அவரது வீடியோக்கள். ஒருநாள் வீடியோ போடவில்லை என்றாலும் 'என்னாச்சு தல' என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு வெல்கம் இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில், வார்னரை கிண்டல் செய்யும் விதமாக, அவரை டேக் செய்து 'அப்போ அன்வர்' என்று ட்வீட் செய்துள்ளார் அஷ்வின்.
29, 2020Appo Anwar? @davidwarner31 ???? https://t.co/5slRjpmAIs
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99)
Appo Anwar? @davidwarner31 ???? https://t.co/5slRjpmAIs
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99) June 29, 2020
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பாடஷா' படத்தில் வரும் 'அப்போ அன்வர்' எனும் டயலாக்கை தான் அஷ்வின் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 'இனி வார்னரின் நிலைமை என்ன?' என்ற பொருள்பட அஷ்வின் ட்வீட் செய்ய, ரசிகர்கள் 'டைமிங் சென்ஸ்ல பின்றியேப்பா' என்று அஷ்வினை சிலாகித்து வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.