2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்?

2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி. பெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி…

By: June 29, 2020, 3:15:50 PM

2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி.

பெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.


என்ன தான் இந்தியா கோப்பையை வென்றிருந்தாலும், அப்போதைய இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை.

ஏன் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணம் குறித்து அணியின் முன்னாள் மேனேஜர் லால்சந்த் ராஜ்புட் தற்போது மனம் திறந்துள்ளார்.

மேட்ச் பிக்ஸிங்கில் ஆஸ்திரேலியாவை ஆட்டுவிக்கும் இந்தியர் – சல்லடை போட்டு தேடும் பிசிசிஐ

அணியில் இம்மூவரும் இடம் பெறாததற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்ற சர்பிரைஸ் காரணத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து லால்சந்த் கூறுகையில், “ஆம். உண்மையில் டிராவிட் தான் சச்சினும், கங்குலியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விளையாடுவதை தடுத்து நிறுத்தினார். அப்போது, உலகக் கோப்பைக்கு முன்னர், இந்தியா இங்கிலாந்தில் விளையாடிய போது, அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். அத்தொடர் முடிந்த பிறகு, பல வீரர்கள் இங்கிலாந்தில் இருந்த படியே நேரடியாக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் சென்றனர்.

இதனால், இளைஞர்கள் உலகக் கோப்பையில் விளையாடட்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

தோனியைப் பொறுத்தவரை, உண்மையில் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மற்றவர்களை விட இரண்டு அடி அதிகமாகவே யோசிப்பார். எனக்கு அவரிடம் பிடித்த ஒரு விஷயம், அவர் எப்போதும் யோசிக்கக் கூடிய ஒரு கேப்டன் ஆவார்.

தோனி என்பவர் கங்குலி மற்றும் டிராவிட்டின் கலவை ஆவார். கங்குலி எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். அதே நேரத்தில் பாஸிட்டிவாக யோசிக்க கூடியவர்” என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Who stopped sourav ganguly sachin tendulkar from playing 2007 t20 world cup

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X